காரைக்குடி:""கல்லூரி படிப்பு முடிந்தும் காதலிக்க மறுத்ததால், வீட்டுக்குள் புகுந்துகத்தியால் குத்தினேன்,'' என, வக்கீல் குடும்பத்தினரை தாக்கிய இன்ஜினீயர் வாக்குமூலம் அளித்தார். காரைக்குடி பள்ளத்தூரை சேர்ந்தவர் வக்கீல் வெள்ளச்சாமி. இவரது மனைவி ராமுதாய். இவர்,பெண்கள் கல்லூரி முதல்வர். இவர்களது மகள்கள் அகிலா, கீர்த்தி. கடந்த ஜூலை19 இரவில், வெள்ளச்சாமி அவரது மனைவி, 2 மகள்களை வீடு புகுந்து,வாலிபர் ஒருவர் கத்தியால்
குத்தினார்.
அவர்,நெல்லை மாவட்டம் களக்காட்டை சேர்ந்த மகேஷ்குமார், 22, எனத்தெரிந்தது. தப்பி ஓடி விட்ட அவரை, பள்ளத்தூர் போலீசார் பாளையங்கோட்டையில் வைத்து நேற்று முன்தினம் கைது செய்தனர். அவர், திண்டுக்கல்லில் உள்ள இன்ஜி.,கல்லூரியில், வெள்ளச்சாமியின் மகள் அகிலாவுடன் பி.இ., படித்தவர் என, தெரிந்தது. மகேஷ்குமார் போலீசில் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது: அகிலா வேறு யாருடன் பேசினாலும் எனக்கு பிடிக்காது. அவர்களிடம்சண்டைக்கு செல்வேன். படிப்பு முடித்தபின், காதலிக்குமாறு அகிலாவைவற்புறுத்தினேன். அவர் மறுத்ததால், கடந்த 19ம் தேதி, இரவு 7.45 மணிக்கு அவரது வீட்டுக்கு சென்றேன். அவரது தந்தை வெள்ளைச்சாமியிடம், விபத்து வழக்கு குறித்து பேச வந்ததாக கூறினேன்.
வீட்டுக்குள் சென்றதும், "உங்கள் மகளை பற்றி பேச வேண்டும்' என்றபோது, அவர் தனி அறைக்குள் அழைத்துச் சென்று, கதவை பூட்டினார். அங்கு நடந்த பேச்சுவார்த்தையில், தகராறு முற்றியது. நான் இடுப்பில் மறைத்து வைத்திருந்த கத்தியால், வெள்ளைச்சாமியை குத்தினேன். அவர் சத்தம் போடவே, வெளியில் இருந்த அவரது மனைவி ராமுத்தாய், மகள்கள் அகிலா, கீர்த்தி கதவை திறந்தனர். காட்டி கொடுத்துவிடுவார்கள் என்ற பயத்தில், அவர்களையும் குத்தி விட்டு தப்பினேன்.
பஸ்சில் ஏறி, நெல்லை பாளையங் கோட்டையில் உள்ள எனது சித்தி வீட்டுக்கு செல்ல முயன்றபோது, போலீசார் பிடித்தனர், என்றார். பிடிபட்ட மகேஷ்குமார் பி.இ.,சிவிலில் 80 சதவீத மார்க் எடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment