பீஜிங் : சீனாவில், ரயில்வே முன்னாள் அமைச்சருக்கு, ஊழல் மற்றும் அதிகார துஷ்பிரயோகம் செய்ததற்காக, அந்நாட்டு நீதிமன்றம், மரண தண்டனை விதித்துள்ளது. சீன ரயில்வே அமைச்சராக இருந்தவர் லியு ஜிஜுன், 60. இவர், 2003ம் ஆண்டு முதல், 2011ம் ஆண்டு வரை, ரயில்வே அமைச்சராக இருந்தார். இவரின் பதவிகாலத்தில், 50 கோடி ரூபாய் அளவிற்கு சொத்து சேர்த்துள்ளதாக இவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
இவர் மீதான வழக்கை விசாரித்த, சீன மக்கள் நீதிமன்றம், ஜீஜுங்கிற்கு, இரண்டாண்டு சிறைத் தண்டனைக்குப் பிறகு, மரண தண்டனை வழங்க உத்தரவிட்டது. மேலும், அவரின் சொத்துக்கள் அனைத்தையும்
அரசு கையகப்படுத்தவும் உத்தரவிடப்பட்டது.
அரசு கையகப்படுத்தவும் உத்தரவிடப்பட்டது.
No comments:
Post a Comment