மூணாறு: போதையில், மகன்களுக்கு, வலுக்கட்டாயமாக மது கொடுத்து, சிகரெட்டால் சூட்ட தந்தை மீது, போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
மூணாறு அருகே, கல்லார் வட்டையார் பகுதியைச் சேர்ந்தவர் முருகன். இவருக்கு மனைவியும், நான்கு மற்றும் ஆறு வயதில் இரண்டு மகன்களும் உள்ளனர். கூலி வேலை செய்து வரும் முருகன், தினமும் போதையில் மனைவி மற்றும் மகன்களை துன்புறுத்தி வந்துள்ளார். சிறுவர்கள் இருவருக்கும் வலுக் கட்டாயமாக மது கொடுத்து சிகரெட்டால் உடல் முழுவதும் சூடு வைத்துள்ளார். இருவரின் உடலிலும், சிகரெட்டால் சுட்டதற்கான வடுக்கள் உள்ளன. முருகன், மகன்களை துன்புறுத்தியது குறித்து, "சைல்ட் லைன்' என்ற குழந்தைகள் நல பாதுகாப்பு அமைப்பினருக்கு தெரியவந்தது. இவர்கள், மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு குழுத் தலைவரிடம் தெரிவித்தனர். அவர், முருகன் மீது, வழக்கு பதிவு செய்யும்படி, வெள்ளத்தூவல் போலீசாருக்கு பரிந்துரைத்தார்.போலீசார் வழக்கு பதிவு செய்தனர்
No comments:
Post a Comment