Friday, 26 July 2013

செயினை பறித்தபோது கழுத்து அறுபட்டு ஆசிரியை சாவு

மதுரை : மதுரை அருகே டூவீலரில் சென்ற பள்ளி ஆசிரியை அணிந்திருந்த தங்க செயினை பறித்தபோது, கழுத்து அறுபட்டு உயிரிழந்தார். மதுரை கூடல்புதூர் அருகேயுள்ள பாசிங்கப்புரத்தைச் சேர்ந்தவர் லூயிஸ் பெர்னாண்டஸ். இவர் ஐகோர்ட் மதுரை கிளையில் வக்கீலாக உள்ளார். இவரது மனைவி ஜெயராணி(52). இவர் மதுரை கூடல்புதூர் அருகே மேலப்பனங்காடியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை செய்து வந்தார்.

ஜெயராணி நேற்று காலை டூவீலரில் பள்ளிக்கு வந்து கொண்டிருந்தார். மேலப்பனங்காடி அருகே வந்தபோது பின்னால் டூவீலரில் வந்த மர்ம நபர்கள், ஜெயராணி டூவீலர் மீது மோதினர். இதில் நிலை தடுமாறி ஜெயராணி கீழே விழுந்தார். அப்போது ஜெயராணியின் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் நகையை அவர்கள் பறித்துள்ளனர். செயினை பிடித்துக் கொண்டு ஜெயராணி போராடினார். இதனால் ஜெயராணியின் கழுத்து நரம்பு அறுந்து ரத்தம் கொட்டியது. சிறிது நேரத் தில் ஜெயராணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

ஜெயராணியின் அலறல் சத்தம் கேட்டு, அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அங்கு ஓடி வந்தனர். அதற்குள் மர்ம நபர்கள் டூவீலரில் தப்பினர். இதுகுறித்து கூடல்புதூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், ஜெயராணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

No comments:

Post a Comment