Monday, 8 July 2013

மனைவியை கொன்று நாடகமாடிய கணவர் கைது


தூத்துக்குடி: மனைவியை கொலை செய்துவிட்டு, அவர் விபத்தில் இறந்ததாக நாடகமாடிய கணவரை, போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம், உடன்குடி அடுத்த தேரியூரைச் சேர்ந்த கட்டட கான்ட்ராக்டர் சுதாகர்,35. இவரது மனைவி சூரியா,30. இவர்களுக்கு, கடந்த 35 நாட்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. குமரி மாவட்டம், சாமித்தோப்பு கோயிலுக்கு சென்ற இவர்கள், அங்கிருந்து ஆம்னி வேனில், நேற்று முன்தினம் இரவு, ஊர்திரும்பிக் கொண்டிருந்தனர். வழியில், நடுவக்குறிச்சி அருகே, நிலைதடுமாறிய வேன், மின்கம்பத்தில் மோதியதில், படுகாயமடைந்து சூரியா, இறந்து விட்டதாகவும், தானும் படுகாயமடைந்ததாகவும், தட்டார்மடம் போலீசாரிடம், சுதாகர் புகார் செய்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றுபார்த்தபோது, அங்கு, ரத்தக்கறையுடன் கத்தி கிடந்தது. சூரியாவின் உடலை, நேற்று பிரேத பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர், கத்தியால் குத்தப்பட்டு இறந்ததாக, தெரிவித்தனர். சந்தேகமடைந்த போலீசார், சுதாகரை "முறைப்படி' விசாரித்தனர். அதில், சூர்யாவை கத்தியால் குத்திக் கொலை செய்ததை அவர் ஒப்புக்கொண்டார்.

No comments:

Post a Comment