சீனாவில் தற்போது தாய்ப்பால் விற்பனை சூடுபிடித்துள்ளது, இதற்கு கடும் எதிர்ப்பும் எழுந்துள்ளது.
சீனாவில் ஊட்டச் சத்து நிறைந்தது, உடலுக்கு அதிக எதிர்ப்பு சக்தியை அளிக்கும் என்பதால் தாய்ப்பாலை புட்டியில் அடைத்து விற்க பல ஏஜென்சிகள் திடீரென முளைத்துள்ளன.
இதற்காக எவ்வளவு பணம் வேண்டுமானாலும் கொடுக்க பணக்காரர்கள் தயாராக உள்ளனர்.
தங்களது குழந்தைகளுக்கு மட்டுமின்றி இளவயதினரும் தாய்ப்பாலை விலைக்கு வாங்கி குடிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இதற்காக சிறிய அளவிலான இயந்திரங்களும் மறைமுகமாக விற்பனைக்கு வந்துள்ளன. தாய்மார்களிடம் இருந்து சிறிய பம்ப் மூலம் தாய்ப்பாலை உறிஞ்சி கணிசமான விலைக்கு விற்கின்றனர்.
இதற்காக தாய்மார்களுக்கு கூலியும் கொடுக்கப்படுகிறது. ஒருவருக்கு அவரவர் உடல் தகுதிக்கு ஏற்ப ரூ.1 லட்சம் முதல் 2 லட்சம் வரை கூலியாக கொடுக்கப்படுகிறது.
இதற்காக ஏராளமான புரோக்கர்கள், கிராமங்களில் உள்ள குழந்தை பெற்ற ஏழை தாய்மார்களை அடிமாட்டு விலைக்கு தயார் செய்கின்றனர்.
இதில் கணிசமான பங்கை அவர்கள் எடுத்து கொண்டு மீதமுள்ள சொற்ப பணத்தை ஏழை தாய்மார்களுக்கு வழங்குகின்றனர்.
பெண்களை வர்த்தக பண்டமாக நடத்தும் நிலைக்கு சீனா சென்றுள்ளது வருத்தத்தை அளிக்கிறது என்று பலரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment