Friday, 26 July 2013

வாய் பேசாததால் விபரீதம் 4 வயது மகனை கால்வாயில் வீசி கொலை


நெல்லை : நெல்லையில் 4 வயது மகனை கால்வாயில் வீசி கொன்ற தந்தை, தானும் தற்கொலை செய்து கொண்டார். மகன் வாய் பேசாததால் இந்த விபரீத முடிவை அவர் எடுத்தார். நெல்லை மாவட்டம், சங்கரன்கோவில் புதுமனை 3வது தெருவைச் சேர்ந்தவர் பெரியார் ராமசாமி (35). டெய்லர், ராசிக்கற்கள் மற்றும் பவளக் கற்கள் வியாபாரமும் செய்து வந்தார். இவரது மனைவி முத்துமாரி (28). இவர்களுக்கு திருமணமாகி 6 ஆண்டுகளாகிறது. இவர்களது மகன் ஹரிகிருஷ்ணன் (4), மகள் பிருந்தா மாரி (2). ஹரிகிருஷ்ணனுக்கு சரியாக பேச்சு வராது. காதும் கேட்காது. இதையடுத்து, ராமசாமி அவனை சென்னை, பெங்களூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்தார்.

கடந்த 3 மாதங்களாக ராமசாமி, பாளையங்கோட்டையில் உள்ள ஒரு டாக்டரிடம் பிசியோதெரபி மூலம் பேச்சு பயிற்சி அளித்து வந்தார். இந்த பயிற்சியை தினமும் அளிக்க வேண்டி இருந்ததால், பாளையங்கோட்டை புதுப்பேட்டை தெருவில் குடும்பத்துடன் வாடகைக்கு குடியேறினார். நாள்தோறும் சிகிச்சை அளித்தும் ஹரிகிருஷ்ணனுக்கு பேச்சு வரவில்லை. மேலும், செலவுக்கும் பணம் இல்லாமல் ராமசாமி சிரமப்பட்டார். இதனால், கடந்த சில தினங்களாக மனமுடைந்த நிலை யில் காணப்பட்ட அவர் குடும்பத்துடன் தற்கொலை செய்ய முடிவு செய்தார்.

நேற்று அதிகாலை 3 மணியளவில் ராமசாமி, மனைவி மற்றும் குழந்தை களை அழைத்துக் கொண்டு அருகில் உள்ள பாளையங் கால்வாய்க்கு சென்றார். அங்கு அமலைச்செடிகள் நிறைந்த பகுதியில் முதலில் தனது மகன் ஹரிகிருஷ்ணனை தூக்கி வீசினார். அவன் அலறித் துடித்துக் கொண்டு வெளியில் ஓடி வந்து விட்டான். பின்னர், மனைவியை பிடித்து கால்வாயில் தள்ள முயன்றார். அவர், கணவரின் பிடியில் இருந்து தப்பி வீட்டிற்கு ஓடிவிட்டார்.

அதன் பிறகு ராமசாமி, ஹரிகிருஷ்ணனை மீண்டும் பிடித்து இழுத்து கால்வாய் தண்ணீரில் அமுக்கினார். இதில் அவன் மூச்சுத் திணறி இறந்தான். பின்னர் அவரும் கால்வாயில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். தகவல் கிடைத்து பாளை தீயணைப்பு நிலைய அலுவலர் வெட்டும் பெருமாள், பேட்டை நிலைய அலுவலர் ஜெயபால் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தேடும் பணியில் ஈடுபட்டனர்.

மூளிக்குளம் வாய்க் கால் பாலத்தின் கீழ் பகுதியில் ராமசாமி சடலமும், பாளையை அடுத்த பொட் டல் கால்வாயில் ஹரிகிருஷ்ணன் சடலமும் சிக்கியிருந்தது தெரிய வந்தது.
தீயணைப்பு படையினர் சென்று இருவரது உடலையும் மீட்டு நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
பாளையங்கோட்டை போலீசார் விசாரணை நடத்தினர்

No comments:

Post a Comment