இலங்கையில் உள்ள மட்டகளப்பு மாவட்டத்தில் ஒட்டமாவடி என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் முஸ்லிம் மக்கள் மட்டுமே வசித்து வருகிறார்கள். அவர்கள் தனியாக பள்ளிக்கூடம் ஒன்றை நடத்தி வந்தனர்.
இந்த பள்ளி மைதானத்தில் இரவில் யாரோ மர்ம மனிதர்கள் புத்தர் சிலையை வைத்து சென்றுவிட்டனர். ஒரு மேஜையில் புத்தர் சிலை வைக்கப்பட்டு அதற்கு குடை போன்ற கூடாரமும் அமைக்கப்பட்டு இருந்தது.
காலையில் பார்த்தபோது புத்தர் சிலை இருப்பதை அறிந்த முஸ்லிம்கள் ஆத்திரம் அடைந்தனர். அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். புத்தர் சிலையை யார் இங்கு கொண்டு வந்து வைத்தது என்று தெரியவில்லை.
பள்ளி நிர்வாகத்துக்கும், இன்னொரு தரப்பினருக்கும் பள்ளி சொத்து தொடர்பாக தகராறு இருந்துள்ளது. இதன் காரணமாக புத்தர் சிலை வைக்கப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது. இதுதொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.
No comments:
Post a Comment