Monday, 23 June 2014

சவூதியில் சூனியம் வைக்க முயன்ற ஆப்பிரிக்கப் பெண்ணுக்கு 1 ஆண்டு சிறை-500 சவுக்கடி

சவூதியில் சூனியம் வைக்க முயன்ற ஆப்பிரிக்கப் பெண்ணுக்கு 1 ஆண்டு சிறை-500 சவுக்கடி
சவூதியில் பெண் போலீசுக்கு எதிராக சூனியம் வைக்க முயன்றதாக கைது செய்யப்பட்ட ஆப்பிரிக்க நாட்டுப் பெண்ணுக்கு ஓராண்டு சிறை தண்டனையும், 500 சவுக்கடியும் தண்டனையாக வழங்கி நீதி மன்றம் தீர்ப்பளித்துள்ளது.

ஆண் - பெண்களை வசியப்படுத்தி, அவர்கள் மீது ஆசைப்படுபவர்களின் காதல் வலையில் வீழ்த்தும் அபூர்வ சக்தியும், கணவன் மனைவியிடையே உள்ள தீராத பிரச்சனைகளை தீர்த்து வைக்கும் வரமும் தனக்கிருப்பதாக கூறி வந்த அந்த பெண்ணின் வீட்டுக்கு சென்ற போலீசார் அவர் சூனிய வேலையில் ஈடுபட்டிருக்கும் வேளையில் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

இதனையடுத்து, சிறையில் அடைக்கப்பட்ட அவர் மீது ஏராளமான புகார்கள் வந்தன. தனது இல்லற வாழ்க்கையை கெடுக்கும் விதமாக தனக்கெதிராக அந்த பெண் சூனியம் வைக்க முயன்றதாக பெண் போலீஸ் ஒருவரும் புகார் அளித்தார்.

இது தொடர்பாக ஜெட்டா கோர்ட்டில் நடைபெற்ற வழக்கில் அந்த ஆப்பிரிக்கப் பெண்ணுக்கு ஓராண்டு சிறையும், ஒரு வேளைக்கு 10 சவுக்கடிகள் என தண்டனை காலத்திற்குள் 50 முறை 500 சவுக்கடிகள் வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டார். தண்டனை காலத்திற்கு பிறகு நாட்டை விட்டு அவரை வெளியேற்றவும் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

No comments:

Post a Comment