Thursday, 12 June 2014

பாரத்தால் உடைந்து விழுந்த பூட்டு பாலம்


பாரீஸ்: காதலர்கள் தொங்க விட்ட பூட்டுகளின் எண்ணிக்கை அதிகரித்ததால், பாரம் தாங்காமல் உடைந்து விழுந்துள்ளது.

ஐரோப்பிய நாடுகளில் ஒன்று பிரான்ஸ்; இதன் தலைநகர் பாரீசில், செய்னே மற்றும் லோரே ஆறுகளின் நடுவே, 'பாண்ட் டெஸ் ஆர்ட்ஸ்' என்ற பெயரில், மரப்பாலம் ஒன்று உள்ளது. 2.4 மீட்டர் அகலம் கொண்ட அந்த பாலத்தின் பக்கவாட்டு பகுதிகளில் பூட்டுகள் தொங்கும்; ஆங்காங்கே காதலர்கள் கைகோர்த்து, உணர்ச்சி பெருக்கில் நின்றிருப்பர். இந்த காட்சி, அந்த பாலத்தில் எப்போதும் காணும் காட்சி. தங்கள் காதல் தொடர வேண்டும் என, விரும்பும் காதலர்கள், பாலத்தின் பக்கவாட்டு சுவரில், பூட்டுகளை பூட்டி தொங்கவிட்டு, சாவியை நதியில் வீசி விடுவர். இவ்வாறு லட்சக்கணக்கான பூட்டுகள் தொங்க விடப்பட்டதால், பாரம் தாங்காமல், கடந்த ஞாயிறு அன்று, அந்த பாலம் உடைந்து விழுந்தது. இதனால், காதலர்கள் மிகுந்த வருத்தம் அடைந்தனர். அந்த வருத்தத்தை நீண்ட நாட்கள் தொடர விரும்பாத பாரீஸ் நகர நிர்வாகத்தினர், காதலர்கள் பாலத்தை உடனடியாக சீர் செய்து, பாலத்தில் காதலர்கள் பூட்டு களை தொங்க விட, நேற்று முதல் அனுமதித்தனர்; இதனால், காதலர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

No comments:

Post a Comment