Wednesday, 11 June 2014

தம்பி மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள மனைவியை துன்புறுத்திய கணவர்

தம்பி மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள மனைவியை துன்புறுத்திய வாலிபர் கைது
திண்டுக்கல் சாஸ்திரி நகரை சேர்ந்தவர் ரத்தினசிங் (வயது29). இவருக்கும் உடுமலைப்பேட்டையை சேர்ந்த ஸ்வீட்லிமேரி (27) என்பவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. குழந்தை இல்லை. டாக்டர்களிடம் சிகிச்சை பெற்றும் குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்தது.
இதனால் உறவினர்கள் அநாகரீகமாக பேசி வந்தனர். இதனால் ரத்தினசிங் தனது மனைவியிடம் தனக்கு குழந்தை தர தகுதி இல்லை என்பதால் எனது தம்பி மூலம் நீ குழந்தை பெற்று தருமாறு கேட்டார். ஆனால் மேரி இதற்கு சம்மதிக்கவில்லை.
இது குறித்து ரத்தினசிங் தனது தம்பியிடம் கூறவே அவர் மேரியிடம் தகாத முறையில் நடக்க முயன்றார். உறவுக்கு சம்மதிக்காததால் மேரியை தனி அறையில் அடைத்து வைத்து கொடுமைப்படுத்தி வந்தனர். அவர்களிடம் இருந்து தப்பித்து வந்த மேரி உடுமலைப்பேட்டையில் உள்ள தனது தாய் வீட்டிற்கு வந்தார். உடல் ரீதியாக பாதிக்கப்பட்ட அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

No comments:

Post a Comment