ஆலங்காயம் அடுத்த பங்கூர் கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது 38) விவசாயி. இவரது மனைவி பவானி (20). திருமணமாகி 2 வருடமாகிறது. குழந்தை இல்லை.
கோவிந்தராஜ், பவானிக்கு அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ளது. கடந்த 7–ந் தேதியும் இதேபோல் தகராறு ஏற்பட்டது. அப்போது பவானியின் பாட்டி உண்ணாமலை (70) என்பவர் தகராறை தடுக்க முயன்றார்.
இதில் ஆத்திரமடைந்த கோவிந்தராஜ் மூதாட்டி உண்ணாமலையை தாக்கி தள்ளியதாக தெரிகிறது. இதில் கீழே விழுந்து படுகாயமடைந்த உண்ணாமலையை வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
பின்னர் டாக்டர்கள் மூதாட்டி உண்ணாமலையை வேலூர் அரசு ஆஸ்பத்திரியில் மேல் சிகிச்சைக்காக சேர்க்கும்படி பரிந்துரை செய்தனர். ஆனால் உண்ணாமலை குடும்பத்தார் அவரை ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லாமல் வீட்டிற்கு கொண்டு சென்றதாக தெரிகிறது. இந்நிலையில் இன்று காலை உண்ணாமலை பரிதாபமாக இறந்தார்.
No comments:
Post a Comment