Wednesday, 11 June 2014

குடித்து விட்டு கும்மாளம் போட்ட ஆசிரியைகள்


பிரித்தானியாவில் மாணவர்களை சுற்றுலாவிற்கு அழைத்து சென்ற ஆசிரியைகள் குடித்துவிட்டு போதையில் அட்டகாசம் செய்துள்ளனர்.
பிரித்தானியாவின் கார்சல்டான் பகுதியில் உள்ள ஸ்டான்லி பூங்கா மேல்நிலை பள்ளியை சேர்ந்த 75 மாணவர்களை, ஸ்பெயின் கால்பந்து சங்கத்திற்கு அப்பள்ளியின் ஆசிரியைகள் அழைத்து சென்றுள்ளனர்.
அப்போது ஆசிரியைகள் குடித்து விட்டு ஒருவருக்கு ஒருவர் தகாத வார்த்தைகளில் திட்டி சண்டை போட்டு கொண்டும், மாணவர்களை நடு இரவில் எழுப்பியும் அட்டகாசம் செய்துள்ளனர்.
மேலும் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மாணவனுக்கு, எந்தவித மருத்துவமும் அளிக்காமல் சண்டை போடுவதில் தீவிரமாய் இருந்துள்ளனர்.
இதனையடுத்து பள்ளி திரும்பிய மாணவர்கள் பள்ளி நிர்வாகத்தில் புகார் செய்ததால் தற்போது ஆசிரியைகளிடம் விசாரணை நடந்து வருகின்றது

No comments:

Post a Comment