Thursday, 26 June 2014

குழந்தையை காரில் பூட்டிய இளம்பெண் கைது


ஹஸ்டன்: அமெரிக்காவில், நைட் கிளப்பிற்குள், 3 வயது குழந்தையுடன் செல்ல அனுமதி மறுக்கப்பட்டதால், திறந்தவெளியில் நிறுத்தப்பட்டிருந்த காரில், குழந்தையை வைத்து பூட்டி விட்டு, கிளப் உள்ளே நுழைந்த, ஆசிய முஸ்லிம் பெண், நேற்று கைது செய்யப்பட்டார். உஸ்மா ஷேக் என்ற அந்த இளம்பெண், கையில் குழந்தையுடன், நைட் கிளப்பிற்குள் நுழைய முற்பட்டதை பார்த்த கிளப் பாதுகாவலர்கள், அந்தப் பெண்ணை உள்ளே அனுமதிக்கவில்லை. குழந்தையுடன் செல்ல அனுமதிக்காததால், குழந்தையை காரில் வைத்து பூட்டி வைத்து விட்டு, சிறிது நேரத்தில் அவர் மட்டும் உள்ளே நுழைந்தார். அவரை மடக்கிய பாதுகாவலர்கள், 'உங்களிடம் இருந்த குழந்தை எங்கே?' என, கேட்ட போது, 'நண்பரிடம் கொடுத்து உள்ளேன்; அவர் குழந்தையை பார்த்துக் கொள்வார்' என, அந்தப் பெண் கூறியுள்ளார். சந்தேகம் அடைந்த பாதுகாவலர்கள், அந்தப் பெண்ணின் கார் அருகே சென்று பார்த்த போது, அக்குழந்தை உள்ளே வைத்து பூட்டப் பட்டிருந்தது. இதையடுத்து, அவர்கள் போலீசில் புகார் தெரிவித்தனர். போலீசாரால் கைது செய்யப்பட்ட அந்தப் பெண், ஒரு லட்சம் ரூபாய் அபராதம் செலுத்தி, ஜாமினில் வெளியே வந்துள்ளார்.

No comments:

Post a Comment