Saturday, 14 June 2014

அறுவை சிகிச்சையில் பயன்படுத்தப்படும் சிமெண்டினால் நோயாளிகள் மரணம்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்

அறுவை சிகிச்சையில் பயன்படுத்தப்படும் சிமெண்டினால் நோயாளிகள் மரணம்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்
இங்கிலாந்தில் நடைபெறும் இடுப்பெலும்பு மாற்று அறுவை சிகிச்சைகளில் எலும்புகளை இணைப்பதற்கு சிமெண்டை பயன்படுத்துவது பொதுவான ஒரு நடைமுறையாக இருந்து வருகின்றது. ஆனால், கடந்த 2005-ம் ஆண்டிலிருந்து நடைபெற்ற இடுப்பெலும்பு மாற்று அறுவை சிகிச்சை நோயாளிகளில் பலர் மரணத்தைத் தழுவியது ஆய்வாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கான காரணத்தை அறியும் முயற்சிகளை இவர்கள் மேற்கொண்டனர்.

இங்கிலாந்தின் முன்னாள் தலைமை மருத்துவ அதிகாரி பேராசிரியர் லியாம் டொனால்ட்சன் உட்பட பலர் இந்த ஆய்வில் ஈடுபட்டனர். அப்போது கடந்த 2005-லிருந்து 2012 வரை இத்தகைய அறுவை சிகிச்சைக்கு உட்பட்ட சுமார் 62 நோயாளிகளிடம் பிசிஐஎஸ் எனப்படும் எலும்பு சிமெண்ட் பதிய நோய் என்ற ஒரு அரிதான நிகழ்வினை அவர்கள் கண்டறிந்தனர். செயற்கை எலும்பை பொருத்துவதற்கு உதவும் சிமெண்டினை அவர்களின் உடல் ஏற்றுக்கொள்ளவில்லை என்பது இந்த ஆய்விலிருந்து தெரிய வந்தது. இத்தகைய கோளாறினால் கிட்டத்தட்ட 41 பேர் இறந்திருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

மருத்துவ சிகிச்சையில் ஈடுபடும்போது நோயாளியின் பாதுகாப்புக்காக எடுக்கப்படும் நடவடிக்கைகள் போதுமானவையாக இல்லை என்றும் இதற்கான பாதுகாப்பு நடைமுறைகள் மேம்படுத்தப்பட வேண்டும் என்றும் ஆய்வாளர்கள் குறிப்பிட்டனர். இவர்களின் ஆய்வறிக்கை இங்கிலாந்து மற்றும் வேல்சில் உள்ள தேசிய சுகாதார சேவை மையத்தின் சுகாதார விநியோகத் தொடர்புடைய தேசிய அறிக்கை மற்றும் கற்றல் மையத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment