Thursday, 26 June 2014

மாரடைப்பில் கதறிய கைதி: ஆபாச படம் பார்த்து கொண்டிருந்த பொலிசார்


பிரித்தானியாவில் கைதி ஒருவர் மாரடைபால் சிறையில் துடிதுடித்த நேரத்தில் அங்கிருந்த காவலர்கள் ஆபாச படம் பார்த்து கொண்டிருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரித்தானியாவில் உள்ள பிரிம்மிங்காம் காவல் நிலையத்தில், லிலோய்ட் பட்லர் (39) என்ற நபரை குடிபோதை வழக்கில் கைது செய்யப்பட்டிருந்தான்.
மறுநாள் நீதிமன்றத்தில் ஆஜார்ப்படுத்த வேண்டி இருந்த இந்த கைதி திடீரென மாரடைப்பால் பாதிக்கப்பட்டு, பொலிசாரின் உதவியை நாடியுள்ளான்.
ஆனால் இவன் பல முறை அழைத்தும் அதை காதில் வாங்காமல் கணனியில் அந்த கைதிக்க காவலாக இருந்த இரண்டு பொலிசார் ஆபாச படத்தை பார்த்து கொண்டிருந்தனர்.
சுமார் 3 மணி நேரப் போரட்டத்திற்கு பின்பு அந்த கைதி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில் அடிப்படை உதவிகளை கூட செய்யாமல் இருந்த அந்த இரண்டு பொலிசும் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் அவர்கள் ஆபாச படம் பார்த்து கொண்டிருந்தது அங்கிருந்த கண்காணிப்பு கமெராவில் பதிவாகியுள்ளது.

No comments:

Post a Comment