சீனாவில் அரசு உயரதிகாரி ஒருவர் வெள்ள சேதத்தை பார்வையிட சென்றபோது வெள்ள நீர் தனது ஷூவை நனைத்துவிடக்கூடாது என்பதற்காக தனது உதவியாளரிடம் தன்னை சுமந்துசெல்லுமாறு கட்டளையிட்டதாகவும் அதன் காரணமாக அவர் தன் பதவியை இழந்ததாகவும் செய்திகள் வெளிவந்துள்ளன.
சீனாவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. அங்கு பல பகுதிகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் ஜியாங்ஸி மாகாணம் குயிக்சி நகரில் இரண்டு மாணவர்கள் உயிரிழந்தனர். இந்த பகுதியில் ஏற்பட்ட வெள்ள சேதத்தை பார்வையிட வந்த சீன அரசு உயரதிகாரி வாங்க் ஜூங்கு வந்தார். ஒரு இடத்தில் தண்ணீர் அதிகமாக இருந்ததால் அதன் மேல் நடந்து சென்றால் தனது விலைமதிப்புள்ள ஷூவுக்கு பாதிப்பு ஏற்படும் என அவர் நினைத்ததால், உடனடியாக தனது ஊழியரிடம் தன்னை அந்த பகுதியை கடக்கும்வரை முதுகில் சுமந்து செல்லுமாறு கட்டளையிட்டார்.
மேலதிகாரியின் கட்டளையை தட்ட முடியாமல் அவரது உதவியாளர் வாங்க் ஜூங்குவை தனது முதுகில் தூக்கில் சென்றார். இந்த காட்சியை அங்கிருந்த ஒருவர் புகைப்படம் எடுத்து ஊடகங்களுக்கு கொடுத்துவிட்டதால் பெரும் பிரச்சனை ஏற்பட்டது. ஒரு உயரதிகாரி தன்னுடைய செல்வாக்கை பயன்படுத்தி தனது உதவியாளரை அடிமைபோன்று நடத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து நடவடிக்கை எடுத்த சீன அரசு உயராதிகாரியை டிஸ்மிஸ் செய்தது.
No comments:
Post a Comment