Tuesday, 10 June 2014

ஓரினசேர்க்கை திருமணத்துக்கு தடை நீக்கம்: அமெரிக்கா கோர்ட்


விஸ்கான்சின்: அமெரிக்காவின் பல்வேறு மாநிலங்களில் ஓரினசேர்க்கையாளர்கள் திருமணங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. விஸ்கான்சின் மாநிலத்தில் ஓரினசேர்க்கை திருமணத்துக்கு விதிக்கப்பட்ட தடையை நேற்று முன்தினம் கோர்ட் நீக்கியது. அமெரிக்காவின் பல்வேறு மாநிலங்களில் ஓரின சேர்க்கை திருமணங்களுக்கு சட்டபூர்வ அங்கீகாரம் அளிக்கப்பட்டு வருகிறது. ஆனால் விஸ்கான்சின் மாநிலத்தில் அரசியலமைப்பின் 14-வது சட்டத்திருத்தத்தின்படி ஒரே பாலினத்தவரின் திருமணங்கள் தடை செய்யப்பட்டு வந்தது. இதற்கு ஓரின சேர்க்கையாளர் இயக்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்து பல போராட்டங்களை நடத்தினர். 

விஸ்கான்சின் மாநிலத்தில் ஒரே பாலினத்தை சேர்ந்தவர்கள் திருமணம் செய்து கொள்வதற்கான தடையை நீக்க வேண்டும் என்று விஸ்கான்சின் மாநில நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். நேற்று முன்தினம் நீதிபதி பார்பரா கிராப் மற்றும் நீதிபதி அந்தோணி கென்னடி ஆகியோர் அடங்கிய நீதிபதிகள் முன் வழக்கு விசாரணை நடைபெற்றது.
‘விஸ்கான்சின் மாநிலத்தில் ஒரே பாலினத்தவர் திருமணம் செய்து கொள்வதற்கு தடை விதிக்க வேண்டிய அவசியம் இல்லை. அவர்களுக்கும் அமெரிக்க சட்டத்தில் சம பாதுகாப்பு உரிமை அளிக்கும் விதத்தில், ஓரின சேர்க்கை திருமணம் மீதான தடையை நீக்கலாம்‘ என்று நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.

No comments:

Post a Comment