Saturday, 7 June 2014

விபசார கும்பலிடம் சிக்கி சீரழியும் சிறுமிகள்

புதுவையில் விபசார கும்பலிடம் சிக்கி குழந்தை பெற்ற சிறுமி
புதுவையில் 18 வயது நிரம்பாத பள்ளி மாணவிகள் மற்றும் மைனர் பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்தும் கும்பல் செயல்படுவது போலீசாருக்கு தெரிய வந்தது. அவர்களிடம் சிக்கி இருந்த 2 மைனர் பெண்களை போலீசார் மீட்டனர்.
இதுதொடர்பாக அருள்மேரி (வயது 70), புஷ்பா (45), மாணிக்கம் (25), ரகுமான் (29) மற்றும் 16 வயதில் ஒரு பெண் ஆகியோரை கைது செய்தனர்.
அவர்களிடம் விசாரணை நடத்திய போது 14 வயது சிறுமி ஒருவர் இந்த விபசார கும்பலுக்கு பல்வேறு உதவிகளை செய்தது தெரிய வந்தது.
அந்த சிறுமியை அழைத்து விசாரிப்பதற்காக போலீசார் முயற்சித்தனர். ஆனால் அவர் தலைமறைவாகி விட்டார். இந்த நிலையில் லாஸ் பேட்டையில் பதுங்கி இருந்த சிறுமியை போலீசார் கண்டுபிடித்தனர்.
அவரிடம் விசாரணை நடத்திய போது அந்த சிறுமியும் விபசார கும்பலிடம் சிக்கி சீரழிந்து இருப்பது தெரிய வந்தது. சிறுமியை அந்த கும்பல் கட்டாயப்படுத்தி விபசாரத்தில் ஈடுபடுத்தியுள்ளார். இதன் மூலம் அவர் கர்ப்பமானார். ஒரு மாதத்திற்கு முன்பு அவருக்கு பெண் குழந்தை பிறந்தது.
அந்த குழந்தையுடன் இருந்த போதுதான் போலீசார் அவரை கண்டு பிடித்தனர். சிறுமியிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். குழந்தையை காப்பகத்தில் ஒப்படைத்துள்ளனர்.
சிறுமி போலீசில் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார். அதில் பல பள்ளி மாணவிகளையும், இளம் பெண்களையும் அவரே அழைத்து சென்று விபசார கும்பலிடம் விட்டதாகவும் கூறினார். சிறுமி கொடுத்துள்ள வாக்குமூலத்தில் கூறி இருப்பதாவது:–
எனக்கு அம்மா இல்லை. அப்பா கட்டிட வேலை செய்கிறார். நான் அரசு பள்ளியில் 8–ம் வகுப்பு படித்தேன். ஒரு நாள் நான் லாஸ்பேட்டை பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்தபோது, வம்பாகீரப்பாளையத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் என்னை கூப்பிட்டு பேசினார். அவர் ஒரு வீட்டில் வீட்டு வேலை செய்வதாக கூறினார். அந்த வீட்டின் உரிமையாளர் தவளக்குப்பத்தை சேர்ந்த புஷ்பா என்றும் என்னை அங்கு அழைத்துச்சென்று பணம் வாங்கி கொடுப்பதாகவும் கூறினார்.
நான் அவருடன் சென்ற போது புஷ்பா என்னிடம் அன்பாக பேசி பணம் கொடுத்தார். எப்போது பணம் வேண்டுமானாலும் என்னிடம் வா தருகிறேன் என்று கூறினார்.
புஷ்பாவிற்கு தேங்காய்திட்டில் ஒரு வீடு இருந்தது. அங்கு என்னை வரும்படி சொன்னார். நான் அங்கு சென்றேன். அங்கு பல ஆண்கள் இருந்தனர். அதில் ஒரு ஆணிடம் என்னை தனியாக இருக்கும்படி கூறினார்.
அந்த ஆள் சொல்கிறபடி நடந்து கொண்டால் எனக்கு நிறைய பணம் தருவதாக கூறினார். அதை நான் ஏற்றுக்கொண்டேன். அந்த ஆண் என்னிடம் தவறாக நடந்து கொண்டார்.
இதன்பிறகு அடிக்கடி அந்த வீட்டுக்கு சென்றேன். பல ஆண்களுடன் என்னை விபசாரத்தில் ஈடுபட வைத்தார்.
இதன் பிறகு நான் பள்ளிக்கு செல்வதை நிறுத்தி விட்டேன்.
இதையடுத்து என்னுடைய தோழிகளையும் அழைத்து வரும்படி புஷ்பா என்னிடம் கூறினார். அப்படி அழைத்து வந்தால் அவர்களுக்கும் பணம் தருகிறேன். அவர்களை அழைத்து வந்ததற்காக உனக்கும் பணம் தருகிறேன் என அவர் ஆசை வார்த்தை கூறினார்.
இதனால் எனது வகுப்பு தோழியிடம் இதை கூறினேன் அவள் அவளது பக்கத்து வீட்டில் இருந்த பிளஸ்–1 மாணவியிடம் இதை கூறினாள். அவர்கள் 2 பேரும் என்னுடன் புஷ்பாவின் வீட்டிற்கு வர சம்மதித்தனர்.
இதனையடுத்து அவர்களையும் அங்கு அழைத்துச்சென்றேன். அவர்களையும் விபசாரத்தில் ஈடுபடுத்தினார்.
புஷ்பாவுடன் ரகுமான், மாணிக்கம், அருள்மேரி ஆகியோரும் அவருக்கு உதவியாக இருந்தனர். அவர்கள் புதுவையில் அருள்படையாட்சி வீதி உள்பட பல பகுதிகளில் வீடுகள் வாடகைக்கு எடுத்து வைத்திருந்தனர். அங்கு வாடிக்கையாளர்கள் வந்தால் எங்களை அங்கு போகச்சொல்வார்கள்.
இப்படி பலரிடம் விபசாரத்தில் ஈடுபட்டதால் நான் கர்ப்பமானேன். கர்ப்பமானது கூட எனக்கு தெரியாது. எனது வயிறு பெரிதாக வந்த போதுதான் கர்ப்பமாகி இருப்பது தெரிய வந்தது. கருவை கலைக்க முயற்சித்தபோது குழந்தை பெரியதாக வளர்ந்து விட்டது. அதை கலைத்தால் உயிருக்கு ஆபத்து என்று கூறினார்கள்.
இதனால் கருவை கலைக்க வில்லை. பின்னர் பஷ்பாவின் உதவியுடன் நான் குழந்தை பெற்றுக்கொண்டேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
புஷ்பாவுக்கு 16 வயது பெண் ஒருவர் துணையாக இருந்துள்ளார். அவர்தான் சிறுமிகளையும், மாணவிகளையும் அழைத்து வந்து புஷ்பாவிடம் விட்டுள்ளார். இந்த சிறுமி போல மேலும் பலர் கட்டாயப்படுத்தி விபசாரத்தில் தள்ளப்பட்டது தெரிய வந்தது. அதுபற்றி போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.

No comments:

Post a Comment