இங்கிலாந்தில் தனது முன்னாள் காதலருக்கு மொபைல் போனில் மெசேஜ் அனுப்பி விட்டு இருவரும் சந்திக்கும் காட்டு பகுதியில் உள்ள மரத்தில் தூக்கிட்டு 15 வயது சிறுமி தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது தொடர்பான வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெறுகிறது.
இதயத்தை உடைத்துவிட்டாய்
இங்கிலாந்து நாட்டின் கம்ப்ரியா நகரின் கெண்டல் பகுதியை சேர்ந்த சிறுமி ஹெலினா பேரல். மருத்துவ தம்பதியரின் 15 வயது மகளான இந்த சிறுமி கடந்த 2012ம் ஆண்டில் பில்லி வில்லியம்ஸ் என்ற சிறுவனை சந்தித்துள்ளார். இந்த சந்திப்பை தொடர்ந்து அவர்கள் இருவரும் தனிமையில் சந்தித்து கொண்டனர். தன்னை விட ஒரு வயது அதிகமுள்ள அந்த சிறுவனுடன் கெண்டல் பகுதியில் உள்ள தனது வீடு அருகே சிறுமி அந்நாட்டு கலாசாரத்தின்படி டேட்டிங் சென்றுள்ளாள்.
அந்த அக்டோபரில் விடுமுறை முடிந்ததும் அந்த சிறுவன், சிறுமியுடனான நட்பை முறித்து கொண்டான். இந்த முறிவுக்கு பின்பு பேஸ்புக்கில் அந்த சிறுமி, தனது இதயத்தை உடைத்துவிட்டாய் என கூறியிருக்கிறாள். அதனுடன் பாராசிட்டமல் மாத்திரைகளையும் அளவுக்கதிகமாக தான் எடுத்து கொள்ள போவதாகவும் கூறியிருக்கிறாள். அதன்பின், குழப்பமான மனநிலையில் இருந்து தெளிவான சூழலுக்கு அவளை கொண்டு வரும் முயற்சியில் அவளது பெற்றோர் ஈடுபட்டு உள்ளனர்.
தற்கொலைக்கு முன் மெசேஜ்
இத்தகைய மனநிலையில் இருந்து விடுபட பள்ளியில் கவுன்சிலிங் எடுத்து கொள்ளும்படி முன்னாள் ஆண் நண்பரான வில்லியம்ஸ் அறிவுறுத்தியுள்ளான். அதன்பின் அவளை ஏற்று கொள்ளும் நோக்கில் விருந்து ஒன்றில் ஹெலினாவை சந்திக்க வில்லியம்ஸ் சென்றுள்ளான். அங்கு மற்றொரு சிறுமிக்கு வில்லியம்ஸ் முத்தம் கொடுத்துள்ளான். இதனால் பாதிக்கபட்ட ஹெலினா கத்தி ஒன்றால் தனது வயிற்றில் குத்தி கொள்ள முயற்சித்துள்ளாள். ஏன் அப்படி செய்கிறாய்? என கேட்ட வில்லியம்ஸ், தன் மீது அவள் இன்னும் அன்பாக இருக்கிறாள் என்பதை தெரிந்து கொண்டுள்ளான்.
இந்த சூழ்நிலையில், கடந்த வருடம் ஜனவரியில் ஹெலினா தற்கொலை செய்தபோது வில்லியம்சிற்கு மெசேஜ் அனுப்பி இருக்கிறாள். இருவரும் முதலில் சந்தித்த பகுதியில் ஹெலினா நின்று கொண்டு தற்கொலை செய்தியை அனுப்பி இருக்கிறாள். குட்பை என்று கூறியதற்கு வேண்டாம்! நில் என வில்லியம்ஸ் கூறியிருக்கிறான். நீண்ட நாட்களாக கூறாமல் அன்றைய தினம் நான் உன்னை காதலிக்கிறேன் என்று கூறி விட்டு தற்கொலை செய்து கொண்டாள். அனைத்திற்கும் நன்றி என கூறியுள்ளாள்.
காட்டு பகுதிக்குள் உடல்
அவள் இப்படி செய்வாள் என நினைத்து பார்க்காவிட்டாலும் உடனடியாக அவளது பெற்றோருக்கு வில்லியம்ஸ் தகவல் தெரிவித்து உள்ளான். ஹெலினாவின் பெற்றோர் போலீசுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். வில்லியம்ஸ் அவளது வீடு அருகே உள்ள காட்டு பகுதிக்குள் அரை மைல் தூரம் கடந்து சென்று தேடியுள்ளான். அவனுடன் போலீஸ் ஒருவரும் சென்றுள்ளார். அங்கு கேசில் கிரீன் ஓட்டல் பகுதியில் உள்ள மரத்தில் ஹெலினாவின் உடல் கண்டெடுக்கப்பட்டது. ஹெலினாவின் அருகே பாடல் ஒன்று தொடர்ந்து ஒலித்து கொண்டே இருந்துள்ளது.
அங்கிருந்து 14 பேப்பர் துண்டுகள் கண்டெடுக்கப்பட்டது. அதில் இருந்து, தனது குடும்பம் மற்றும் நண்பர்களிடம் குட்பை என்று தற்கொலை செய்வது குறித்து கடிதம் எழுதி இருக்கிறாள். ஆனால், அவளது ஆசிரியர் ஒருவர் அதனை மறைத்து வைத்து விட்டார் என தெரிய வந்துள்ளது. தனது 14வது வயதில் பள்ளியில் படிக்கும்போது ஐரோப்பா சுற்று பயணம் மேற்கொண்டபொழுது, 25 வயது வாலிபர் ஒருவரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு இருக்கிறாள்.அதில் இருந்து அகோரப்பசி எடுக்கும் புலிமியா என்ற நோயால் பாதிக்க பட்டிருந்தால்
இதுபோன்ற காரணங்களால் தொடர்ந்து ஒன்றரை வருடங்களாக மனநிலை பாதித்த ஹெலினா இறுதியில் தற்கொலை முடிவை எடுத்து இருக்கிறாள்.
No comments:
Post a Comment