Saturday, 7 June 2014

வாளுடன் பொற்கோவிலில் சீக்கியர்கள் மோதல்


அமிர்தசரஸ்: சீக்கியர்களின் புனித தலமான பொற்கோவிலில், சீக்கியர்களின் இரு பிரிவினருக்கு இடையே நேற்று நடந்த மோதலில், பலர் படுகாயம் அடைந்தனர்.

அகாலி தளம் கட்சியை சேர்ந்த, முதல்வர் பிரகாஷ் சிங் பாதல் தலைமையிலான, பஞ்சாபின் அமிர்தசரஸ் நகரில் உள்ளது, சீக்கியர்களின் புனித தலமான பொற்கோவில். அங்கு மறைந்திருந்த தீவிரவாதிகளை வெளியேற்ற, 1984ல், கோவில் மீது ராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதில், பயங்கரவாதிகள் பலர் கொல்லப்பட்டனர்.அதன், 30வது நினைவு தினம், நேற்று அனுசரிக்கப்பட்டது. பொற்கோவில் மூலஸ்தானம் என கருதப்படும், ஹர்மந்திர் சாகிப் அருகே, கொல்லப்பட்ட தீவிரவாதிகளுக்கு ஆதரவானவர்களுக்கும், பொற்கோவில் நிர்வாக அமைப்பான, சிரோன்மணி குருத்வாரா பிரபந்த கமிட்டியினருக்கும் இடையே, பயங்கர மோதல் ஏற்பட்டது. ஒருவரை மற்றொருவர், வாள், ஈட்டிகளால் தாக்கினர்; பலருக்கு படுகாயம் ஏற்பட்டது; இதனால், பக்தர்கள் கோவில் வளாகத்தில் சிதறி ஓடினர். பின்னர் மதத் தலைவர்கள், இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தினர்

No comments:

Post a Comment