செங்கோட்டை அருகே உள்ள இலத்தூரை சேர்ந்தவர் திருமலைமுத்து. இவரது மகள் பெரியதாய் என்ற பிரியா (வயது21). இவர் தற்போது தான் பி.காம் படித்து முடித்து இருக்கிறார்.
இவருக்கும் சுரண்டையை சேர்ந்த ராணுவ வீரர் கணேசன் என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது. நாளை இரண்டு பேருக்கும் இலத்தூரில் வைத்து திருமணம் நடக்க இருந்தது.
இந்த நிலையில் மாப்பிள்ளைக்கு தலையில் லேசாக இளவழுக்கை இருந்ததாக கூறப்படுகிறது. இது புதுப்பெண் பிரியாவுக்கு பிடிக்கவில்லை. இதனால் தனக்கு இந்த மாப்பிள்ளை வேண்டாம் என்று வீட்டில் கூறியுள்ளார். ஆனால் வீட்டில் திருமணம் நிச்சயிக்கப்பட்டு விட்டது. இனி திருமணம் வேண்டாம் என்றால் நிறுத்த முடியாது. மாப்பிள்ளைக்கு நல்ல குணம், அரசு வேலை என்று கூறி பிரியாவை சமாதானப்படுத்தி உள்ளனர்.
No comments:
Post a Comment