Saturday, 14 June 2014

முன்னாள் காதலியுடன் வசித்தவரின் இதயத்தை தின்ற காட்டுமிராண்டி:

முன்னாள் காதலியுடன் வசித்தவரின் இதயத்தை தின்ற காட்டுமிராண்டி: தென்னாப்பிரிக்காவில் பயங்கரம்
காதல் படுத்தும்பாடு மனிதர்களைக் காட்டுமிராண்டிகளாகவே பல சமயங்களில் மாற்றிவிடுகின்றது என்பதற்கு இந்த சம்பவம் ஒரு எடுத்துக்காட்டாக உள்ளது. தென்னாப்பிரிக்காவில் உள்ள கேப் டவுன் நகரத்தில் 62 வயது நிரம்பிய புயிசெலோ மனோனா என்பவர் பெண் ஒருத்தியுடன் வசித்து வந்தார். இந்தப் பெண்ணின் முன்னாள் காதலர் இவர்கள் இருந்த வீட்டிற்கு வர, அவர்கள் மூவரும் அமர்ந்து பேசிக் கொண்டிருந்துள்ளனர். சிறிது நேரம் சென்றபின் அந்தப் பெண்ணை மது வாங்கி வருமாறு கூறிய முன்னாள் காதலன், பணத்தைக் கொடுத்து அவளை வெளியில் அனுப்பியுள்ளான்.

மதுவை வாங்கிக்கொண்டு வீட்டிற்குத் திரும்பிய அந்தப் பெண் கண்ட காட்சியானது அவளை அதிர்ச்சியுறச் செய்துள்ளது. 62 வயது மனோனாவை கத்தியால் குத்தி சாய்த்த அந்தப் பெண்ணின் முன்னாள் காதலன் அவரது உடலைக் கிழித்து இதயத்தை அறுத்து முள்கரண்டி மற்றும் கத்தியால் வெட்டி தின்றுகொண்டிருந்தான். இந்தக் காட்சியைப் பார்த்து பதறிய அக்கம்பக்கத்தவர்கள் காவல்துறையை அழைத்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த அவர்களும் காட்சியின் கோரத்தைக் கண்டு உள்ளே போகவே தயங்கியுள்ளனர்.

இந்த செயலை நிறுத்துமாறு நாங்கள் கூக்குரலிட்டும் அவன் காதில் வாங்கிக் கொள்ளவேயில்லை. ஒரு மனிதனின் இதயத்தை மற்றொரு மனிதன் ரத்தமும் சதையுமாக சுவைத்துக் கொண்டிருக்கும்போது யாரால்தான் அருகே செல்லமுடியும் என்று பக்கத்தில் இருந்த ஒருவர் குறிப்பிட்டார். முக்கோணக் காதலே இந்த கொலையின் குறிக்கோளாக இருந்திருக்கமுடியும் என்று இணை காவல்துறை அதிகாரியான ஷரோன் ஜெப்டா கூறினார்.

தற்போது கைது செய்யப்பட்டுள்ள இந்தக் குற்றவாளி விசாரணையை எதிர்நோக்கியுள்ளான் என்று காவல்துறை தகவல் தொடர்பாளரான பிரட்ரிக் வான் விக் இன்று செய்தியார்களிடம் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment