Thursday, 12 June 2014

மாணவிகள் பலாத்காரம்; பார்வையிட்ட சப் கலெக்டர் மயக்கம்


பொள்ளாச்சி: கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் 2 பள்ளி மாணவிகள் மர்ம நபர்களால் கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டனர். இதில் பாதிக்கப்பட்ட 2 பேரும் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளனர். மாணவிகளை பார்வையிட சென்ற சப்.கலெக்டர், அவர்கள் நிலையைக் கண்டு மயக்கமுற்றார். இந்த மாணவிகள் பலாத்காரம் சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. சமீப காலமாக கற்பழிப்பு, கொலை , என உ.பி., அரசை உலுக்கி வருகிறது. நேற்று கூட ஒரு போலீஸ் ஸ்டேஷனிலேயே ஒரு பெண் போலீஸ்காரர்களால் கற்பழிக்கப்பட்டார். பாடான் கிராமத்தில் நடந்தது போல் தற்போது 16 வயது பெண் ஒருவர் கற்பழித்து மரத்தில் தூக்கில் தொங்க விடப்பட்டுள்ளார். இது மாநிலத்திற்கு அவப்பெயரை ஏற்படுத்தியிருக்கிறது. 


இந்நிலையில் தமிழகத்தில் ஒரே நாளில் 2 பள்ளி மாணவிகள் பலாத்காரம் செய்யப்பட்டுள்ள சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. 

பாழடைந்த மண்டபம்: பொள்ளாச்சி பழைய பஸ் ஸ்டாண்ட் சர்ச் அருகே இந்த விடுதி உள்ளது. பாழடைந்த மண்டபம்போல் காட்சியளிக்கும் இந்த விடுதியில் 17 மாணவர்கள், 3 மணவிகள் உள்ளனர். இங்கு 2 நபர்கள் நேற்று நள்ளிரவில் நுழைந்தனர். மிரட்டி, 10 மற்றும் 11 வயது உள்ள 2 மாணவிகளை கடத்தி சென்றனர். அருகில் உள்ள ஒரு கட்டடத்தில் வைத்து பலாத்காரம் செய்துள்ளனர். பின்னர் இந்த கும்பல் தப்பி ஓடி விட்டது. உடலில் ரத்த காயங்களுடன் அழுது கொண்டே 2 மாணவிகளும் விடுதிக்கு திரும்பினர். விவரம் தெரிந்ததும் விடுத நிர்வாகத்தினர் போலீசில் புகார் செய்தனர். இதனையடுத்து 2 மாணவிகளும் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். 

சம்பவம் நடந்த விடுதியில் ஐ.ஜி., தேவஆசீர்வாதம், எஸ்.பி., சுதாகர் விசாரித்து வருகின்றனர். சில குளூ கிடைத்திருப்பதாவும் குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்றும் அவர்கள் தெரிவித்தனர். இதற்கிடையில் பெண் சப்.கலெக்டர் ரஷ்மி சித்தார்த் மாணவிகளை பார்த்து விசாரித்தார். மாணவிகளின் நிலையை பார்த்து அதிர்ந்து போனார். இதனால் அவர் சற்று மனம் தளர்ந்து மயக்கமுறும் நிலைக்கு சென்றார். டாக்டர்கள் அவருக்கு சிகிச்சை அளித்தனர்.

பாதுகாப்பு இல்லை: இந்த தனியார் பள்ளி விடுதி ஒரு பாழடைந்த கட்டடத்தில் செயல்படுகிறது. இங்கு உரிய பாதுகாப்பு இல்லை . சரியான கேட் கூட இல்லாமல் இருந்தது. இது போன்ற சம்பவம் அடிக்கடி இங்கு நடந்து வருவதாக அக்கம் பக்கத்தினர் குற்றம்சாட்டுகின்றனர். சிலர் இங்கு வந்து போவதாக கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட மாணவிகளின் உறவினர்கள் இந்த விடுதி முன்பு கூடியுள்ளனர்

No comments:

Post a Comment