Tuesday, 10 June 2014

மாணவியின் வாய்க்கு பூட்டு போட்ட ஆசிரியர்: கொதித்தெழுத்த தந்தை


பிரித்தானியாவில் 11வயது மாணவி வகுப்பறையில் பேசி கொண்டே இருப்பதால் அவரின் வாயை, அவர் வகுப்பறை ஆசிரியை ப்ளாஸ்திரியால் மூடியுள்ளார்.
இங்கிலாந்தில் டெர்மிசையர் நகரை சேர்ந்த எலிசி சுமித் (11) என்ற சிறுமி வில்லியம் அலித் பள்ளிக்கூடத்தில் படித்து வருகிறார்.
இவர் வகுப்பறையில் பாடங்களை சரியாக கவனிக்காமல் எப்போதும் பேசிக்கொண்டு இருப்பதிலேயே அதிக ஆர்வம் காட்டி வந்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த வகுப்பாசியர் இவரை தண்டிக்கும் நோக்கில் சுமார் 15 நிமிடங்களுக்கு இவர் வாயை பிளாஸ்த்ரி போட்டு ஒட்டியுள்ளார்.
இவ்விடயம் அறிந்து கோபமடைந்த மாணவியின் தந்தை ஆசிரியை மீது பள்ளிக்கூடத்தில் புகார் கொடுத்தால், அந்த ஆசிரியை மாணவியிடமும் அவரது குடும்பத்தினரிடமும் மன்னிப்பு கேட்டுள்ளார்.
ஆனால் பள்ளி நிர்வாகத்தால் அந்த அசிரியை எந்த விதத்திலும் தண்டிக்கப்படவில்லை.
இதுகுறித்து மாணவியின் தந்தை கூறுகையில், எனது மகள் அதிகமாக பேசியிருந்தால் அவளை வகுப்பறையிலிருந்து வெளியே அனுப்பி கண்டித்திருக்கலாம் என்றும் ஆசிரியைக்கு எந்தவித தண்டனையும் கொடுக்காதது எனக்கு மிகுந்த வருத்தத்தை அளிக்கின்றது எனவும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment