Wednesday, 18 June 2014

தண்ணீர் இல்லாததால் திருமணங்கள் இல்லை


புதுடெல்லி : டெல்லி அருகே உள்ள இஸ்சாபூரில் பல ஆண்டுகளாக கடுமையாக குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. இதன் காரணமாக இந்த கிராமத்தில் பல ஆண்டுகளாக திருமணங்கள் ஏதும் நடக்கவில்லை. இந்த கிராமத்தில் இருக்கும் குடிநீர் பிரச்னையை பார்த்து விட்டு இங்குள்ள ஆண்களுக்கு பெண் தர பலரும் மறுத்து விட்டனர். இதனால் 30 வயதிற்கு மேல் ஆகியும் இங்குள்ள பல ஆண்களுக்கு இன்னும் திருமணம் நடைபெறாமல் உள்ளதாகவும் இப்பகுதி மக்கள் கவலையுடன் தெரிவித்தனர். 

No comments:

Post a Comment