பெரம்பலூர் மாவட்டம் பாடாலூர் அருகே உள்ள தேனூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜகோபால் (42). இவர் திருச்சி– துறையூர் வழித்தடத்தில் இயங்கும் தனியார் பேருந்து டிரைவராக உள்ளார். இவருக்கு புஷ்பா என்ற மனைவியும், பத்தாம் வகுப்பு படித்து வரும் மகளும், 2 மகன்களும் உள்ளனர்.
டிரைவராக உள்ள ராஜ கோபாலுக்கு குடிப்பழக்கம் உள்ளது. நேற்று மதியம் 3 மணிக்கு வேலை முடிந்ததும் மது குடித்த ராஜகோபால் போதை தலைக்கேறியபடி வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு கட்டிலில் புஷ்பாவும், பள்ளியில் இருந்து வந்த மகளும் படுத்திருந்தனர்.
போதையில் இருந்த ராஜ கோபால் தனது மகளிடம் தவறாக நடக்க முயன்றுள்ளார். இதில் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் அலறி அடித்துக் கொண்டு வீட்டிற்கு வெளியில் ஓடிவந்துள்ளார். சத்தம் கேட்டு எழுந்த புஷ்பா தனது கணவர் போதையில் மகளிடமே தவறாக நடக்க முயன்தை அறிந்து கடும் ஆத்திரம் அடைந்தர்.
உடனடியாக மகளை அழைத்துக் கொண்டு பெரம்பலூர் ஆட்சியர் அலுவலகம் சென்ற புஷ்பா, அங்கு குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர் ஜேசுராஜனிடம் புகார் அளித்தார். புகாரை பெற்றுக் கொண்ட ஜேசுராஜன் இது குறித்து நடவடிக்கை எடுக்க பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் ரஞ்சனாவிற்கு உத்தரவிட்டார்.
இதையடுத்து ராஜகோபால் மீது வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். ராஜகோபாலை 15 நாள் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
குடிபோதையில் மனைவிக்கும், மகளுக்கும் வித்தியாசம் தெரியாமல் ராஜகோபால் நடந்து கொண்ட விதம் பலரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
No comments:
Post a Comment