மராட்டிய மாநிலம் கோலாப்பூர் மாவட்டம் முர்குட்டை சேர்ந்தவர் ஷியாம்(வயது32). இவர் போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணம் முடிந்து பல ஆண்டுகளாக குழந்தை இல்லை. இதனால் ஷியாம் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்ய முடிவு செய்தார். மேலும் ஆசிரியரான தன் மனைவி பெயரில் உள்ள ரூ.2 கோடி இன்சூரன்ஸ் தொகையையும் பெற எண்ணினார்.
இதையடுத்து அவர் தனது மனைவி மீது காரை ஏற்றி கொலை செய்தார். மேலும் அது விபத்து என்று போலீசாரிடம் நாடகமாடினார். ஆனால் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்திய போலீசார், ஷியாம் தன் மனைவியை காரை ஏற்றி கொலை செய்ததை கண்டுபிடித்தனர். இதையடுத்து போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
No comments:
Post a Comment