ரபீக்கும் மதுமிதாவும் இண்டர்நெட் மற்றும் செல்போன் மூலம் தங்கள் காதலை வளர்த்தனர். இவர்களது காதலுக்கு மதுமிதாவின் வீட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. அவருக்கு உடனடியாக திருமணம் செய்து வைக்க வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்தனர்.
இதையறிந்த மதுமிதா தனது இண்டர்நெட் காதலனுக்கு தகவல் தெரிவித்தார். அதுவரை ஒருவரையொருவர் வெப்காமிரா மூலமே பார்த்து பழகி வந்த காதல் ஜோடியினர் நேரில் சந்தித்து காதல் திருமணம் செய்ய முடிவு செய்தனர்.
கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ரபீக் தனது நண்பர்களுடன் கோவை சென்றார். அங்கு மதுமிதா புதுப்பெண்ணாக வந்தார். நேரில் கண்டுகளித்த காதல் ஜோடியினர் உடனடியாக திருமணம் செய்ய முடிவு செய்தனர்.
அதன்படி இஸ்லாமிய முறைப்படி ரபீக்கும் மதுமிதாவும் திருமணம் செய்து கொண்டு நெல்லை சந்திப்பு சி.என்.கிராமத்தில் குடும்பம் நடத்த தொடங்கினர்.
மகளை காணாமல் தவித்த மதுமிதாவின் பெற்றோர் மற்றும் உறவினர் அவரை பல இடங்களில் தேடினர். இறுதியில் மதுமிதா தனது காதல் கணவருடன் நெல்லை சி.என்.கிராமத்தில் குடித்தனம் நடத்தி வருவது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து மதுமிதாவின் தந்தை மற்றும் அவரது உறவினர்கள் சுமார் 10 பேர் 2 காரில் நேற்று இரவு சி.என்.கிராமம் சென்றனர். உறவினர்கள் காரில் இருக்க பெற்றோரும் ஒரு சிலரும் மதுமிதாவை பார்க்க வேண்டும் என்று அவர் வசித்த வீட்டுக்கு சென்றனர்.
அங்கு மதுமிதாவின் காதல் கணவர் ரபீக் மற்றும் அவரது உறவினர்கள் திரண்டு மதுமிதாவை பார்க்க அனுமதிக்க முடியாது என்று தடுத்தனர். மேலும் மதுமிதாவை கடத்தி செல்ல அவரது பெற்றோர்கள் ஒரு கும்பலுடன் வந்துள்ளதாக நினைத்து அங்கு பெரும் கூட்டம் கூடியது.
இதனால் 2 தரப்பினருக்கும் கடும் வாக்குவாதம், மோதல் ஏற்பட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கு நெல்லை சந்திப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் மற்றும் போலீசார் விரைந்து சென்று அமைதிப்படுத்தினர்.
No comments:
Post a Comment