Wednesday, 25 June 2014

உலகக்கோப்பை சூதாட்டத்தால் தற்கொலை செய்து கொண்ட சீன மாணவன்


உலகக்கோப்பை கால்பந்து போட்டி தற்போது பிரேசிலில் நடைபெற்று வருகிறது.இங்கு நடைபெறும் போட்டிகள் குறித்து உலகம் முழுவதும் பல இடங்களில் சூதாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக  சீனாவில் இந்த வகையான சூதாட்டம் பெரிய அளவில் நடைபெற்று வருகிறது. மேலும் இங்கு உலகக்கோப்பைக்கான லாட்டரி டிக்கெட் விற்பனையை அரசே ஏற்று நடத்டதுவது குறிப்பிடத்தக்கது. இங்க நடைபெற்ற உலகக் கோப்பை சூதாட்டத்தில் லின் என்ற மாணவன் ஏராளமான பணத்தை பந்தயமாக வைத்து இழந்துள்ளான். இதனால் தாங்க முடியாத மனவேதனை அடைந்த அவன் யாரும் எதிர்பாராத வண்ணம்  ஏழாவது மாடியில் இருந்து திடீரென்று குதித்து தற்கொலை செய்து கொண்டான்.

மாணவனின் தற்கொலை குறித்து அவனது நண்பர்கள் கூறுகையில் “லின் சூதாட்டத்தில் ஈடுபடுவதற்காக அளவிற்கு மீறி வட்டிக்கு பணத்தை கடனாக வாங்கியுள்ளது தெரியவந்துள்ளது. இதே கருத்தை லின்னின் தற்கொலையை நேரில் பார்த்த சாட்சிகளும் ஆமோதித்தனர்.

No comments:

Post a Comment