Wednesday, 25 June 2014

இங்கிலாந்தில் தனது குழந்தை வயிற்றில் வளர்வது தெரிந்ததும் காதலியை கொன்று புதைத்த முன்னாள் காதலன்


இங்கிலாந்து நாட்டின் ஆக்ஸ்போர்டுஷைர் நகரில் டிட்காட் பகுதியில் இறந்த இளம்பெண்ணின் உடல் கண்டெடுக்கப்பட்டது.  இது குறித்த போலீசார் விசாரணையில் அவள் பெயர் ஜேடன் பார்க்கின்சன் (வயது 17) என தெரிய வந்தது.  கடந்த டிசம்பரில் படுகொலை செய்யப்பட்ட ஜேடன் கர்ப்பிணி ஆவார்.  அவளது காதலன் பென் பிளேக்லி (வயது 22).  பிளேக்லி தனது காதலியை அடித்து கொன்றதை மறுத்தாலும், அதன்பின் வழக்கு விசாரணையில் குற்றத்தை ஒப்பு கொண்டான்.

மிரட்டல்


தனது காதலி ஜேடனை ஆடைகளற்ற கோலத்தில் 30 புகைப்படங்களும் மற்றும் 13 வீடியோக்களும் எடுத்து வைத்துள்ளான் பிளேக்லி.  அதன்பின்பு அவற்றை பேஸ்புக்கில் அனுப்பி விடுவதாக மிரட்டியுள்ளான்.  இது தொடர்பான வழக்கு விசாரணை ஆக்ஸ்போர்டு கிரவுன் நீதிமன்றத்தில் நடந்தது.  அதில், வழக்கறிஞர் ரிச்சர்டு லத்தம் கூறுகையில், ஜேடன் தங்கி இருந்த விடுதியின் ஊழியர்களிடம், தான் அவளை அடித்ததை, தலையில் உதைத்ததை குறித்து பிளேக்லி கூறியுள்ளான்.

தொடர்ந்து ஜேடனை பலமுறை அடித்து, துன்புறுத்தி வந்துள்ள பிளேக்லி அவள் தனது குழந்தையை சுமக்கிறாள் என்பது தெரிந்த பின்னர் ஆவேசமடைந்து அடித்து கொன்றுள்ளான்.  பின்பு உடலை எடுத்து தனது மாமா ஆலன் கென்னடியை புதைத்து வைத்த இடத்தில் வைத்துள்ளான்.  உடல் கண்டெடுக்கப்படுவதற்கு இரு வாரங்களுக்கு முன்பு ஜேடன் சி.சி.டி.வி.யில் தெரிந்து இருக்கிறாள்.  கொலையாளி பிளேக்லியின் வீட்டிற்கு அருகில் வசிப்பவர்களில் ஒருவர் கூறுகையில், ஜேடன் கறுப்பு கண்களுடன் மிக அமைதியாக இருப்பவள் என தெரிவித்துள்ளார். 

No comments:

Post a Comment