உலக மக்கள் தொகையில் முதலிடத்தை பெற்றுள்ள சீனாவில் மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில் அந்நாட்டு அரசு, பல்வேறு கட்டுப்பாடுகளை கொண்டு வந்துள்ளது. இதன்படி ஒரு தம்பதி ஒரு குழந்தை மட்டுமே பெற்றுக்கொள்ள வேண்டும். அதற்குமேல் பெற்றுக்கொண்டால் அபராதம் விதிக்கப்படுவது வழக்கம்.
இந்த நிலையில் சீனாவின் குவான்க்சி மாகாணத்தைச் சேர்ந்த சின்கியோ என்பவர் அரசு சட்டத்தை மீறி 4 குழந்தைகளை பெற்றார். இதனை அறிந்த குடும்ப கட்டுப்பாட்டு அதிகாரிகள் அவருக்கு அபராதம் விதித்து அதனை வசூலிக்க சென்றனர். இதனால் ஆத்திரம் அடைந்த சின்கியோ, அவர்களை தாக்கி கழுத்தை அறுத்து கொலை செய்தார். இதனையடுத்து அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி, அதிகாரிகளை கொன்ற சின்கியோவிற்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார்
No comments:
Post a Comment