பிரித்தானியாவை குழந்தைகளை சரியாக பராமரிக்காத தம்பதியருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியாவின் க்ளாஸ்டர்ஷியர் நகரில் தம்பதியர் ஒருவர் தங்களது 5 குழந்தைகளுடன் வசித்து வருகின்றனர்.
3 வயது முதல் 14 வயது வரை உள்ள இவர்களது குழந்தைகள், உணவு குறைப்பாடு, தலையில் பேன், பிளே தொந்தரவு மற்றும் அழுக்கு மற்றும் துர்நாற்றம் வீசும் ஆடைகளுன் வாழ்ந்து வந்துள்ளனர்.
சுகாதாரமற்ற அறையில் இவர்கள் தங்கவைக்கப்பட்டதால் நோய் ஏற்பட்டு பாதிப்பிற்குள்ளானதில் 3 வயது சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இதனையடுத்து மற்ற குழந்தைகளும் இவ்வரையிலிருந்து வெளியேற்றப்பட்டு குழந்தைகள் நலக்காப்பகத்தில் தற்போது சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் குழந்தைகளை சரியாக பராமரிக்க தவறிய பெற்றோருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment