Tuesday, 10 June 2014

மருமகனுடன் தகாத உறவு: கர்ப்பமான அவமானத்தில் மாமியார் தற்கொலை


திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவிலில் உள்ள முருகம்பாளையத்தை சேர்ந்தவர் அங்கமுத்து (வயது 57). சலவைத்தொழிலாளி. இவருக்கும் பழனியம்மாள் என்பவருக்கும் திருமணம் நடந்து. 2 மகள்கள் உள்ளனர்.
கடந்த 15 வருடத்துக்கு முன் பழனியம்மாள் இறந்துவிட்டார். இந்நிலையில் கஷ்டப்பட்டு 2 மகள்களையும் வளர்த்து ஆளாக்கினார். திருமண வயதை எட்டியதும் மகள்களுக்கு திருமணம் செய்து வந்தார். தனியாக வசித்த அங்கமுத்து மகள்களை கரை சேர்த்து விட்டோம், இனி தனக்கு ஒரு துணை வேண்டும் என்று நினைத்தார். இதைத்தொடர்ந்து மற்றொரு பழனியம்மாள் (39) என்ற பெண்ணை திருமணம் செய்தார். பண்டிகை மற்றும் விஷேச காலத்துக்கு அடிக்கடி 2 பெண்களும் அவர்களது மருகன்களும் தந்தை வீட்டுக்கு வந்து சென்றனர்.
இதில் மூத்தமகள் காந்தி என்பவரின் கணவர் பாலசுப்பிரமணியத்துக்கும் மாமியார் பழனியம்மாளுக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. பாலசுப்பிரமணியமும், பழனியம்மாளும் அடிக்கடி வெளியே சென்று வந்தனர்.
வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பாலசுப்பிரமணியம் மாமியார் வீட்டுக்கு வருவார். அங்கு இருவரும் உல்லாசமாக இருந்தனர். மாமியார், மருமகன் என்பதால் பாலசுப்பிரமணியம் அடிக்கடி வீட்டுக்கு வந்து செல்வதை அக்கம் பக்கத்தினர் தவறாக எடுத்துக்கொள்ளவில்லை. அதுவே அவர்களுக்கு சாதகமாக அமைந்தது.
இந்நிலையில் தவறான உறவால் பழனியம்மாள் கர்ப்பமானார். அதிர்ச்சியடைந்த கணவர் கர்ப்பத்துக்கு காரணம் குறித்து ஆராய்ந்தபோது மருமகன் பாலசுப்பிரமணியத்துக்கும் தனது மனைவிக்கும் ஏற்பட்ட பழக்கத்தால் அவர் கர்ப்பமானது தெரியவந்தது. குடும்ப மானம் பறிபோய் விடும் என்று அஞ்சிய அங்கமுத்து மனைவியை ஆஸ்பத்திரிக்கு அழைத்துச்சென்று கருவை கலைத்தார்.
இது அக்கம் பக்கத்தினருக்கு தெரியவந்தது. அவமானம் அடைந்த பழனியம்மாள் கே.வி.பழனிசாமி நகரில் உள்ள கள்ளக்காதலன் பாலசுப்பிரமணியன் வீட்டுக்கு சென்று விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
வெளியே சென்ற உறவினர்கள் வீட்டுக்கு வந்துபார்த்தபோது பழனியம்மாள் பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து அங்கமுத்து வெள்ளகோவில் போலீசில் புகார் செய்தார். வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

No comments:

Post a Comment