ராமநாதபுரம்:ராமநாதபுரம் அருகே நகை அடகு வைப்பது குறித்து, ரோட்டில் நின்று கொண்டு, மொபைல் போனில் ஆலோசனை கேட்ட, பெண்ணின் 8 பவுன் நகை பஸ்சில் 'அபேஸ்' ஆனது.சத்திரக்குடி அருகே செய்யாலுாரைச் சேர்ந்த செல்வக்குமார் மனைவி பிரேமா, 25. நேற்று முன்தினம் ராமநாதபுரத்தில் உள்ள உறவினர் வீட்டு விசேஷத்தில் கலந்து கொள்ள, செய்யாலுார் பஸ் ஸ்டாப் வந்தார்.அப்போது அவரது 8 பவுன் நகையை, அடகு வைப்பது குறித்து ரோட்டில் நின்று கொண்டு, மொபைல் போனில் உறவினரிடம் விசாரித்தார். பின்னர், செய்யாலுார் ராமநாதபுரம் டவுன் பஸ்சில் வந்த பிரேமா, சாலைத்தெரு பஸ் ஸ்டாப்பில் இறங்கினார். அங்கு, அவரது பையில் வைத்திருந்த 8 பவுன் நகை மாயமானது தெரிந்தது.அவரது புகார்படி, ராமநாதபுரம் பஜார் போலீசார் வழக்கு பதிந்தனர். ரோட்டில் நின்று போனில் பேசியதை கவனித்த மர்மஆசாமி, பிரேமாவை பின்தொடர்ந்து, பஸ்சிலேயே வந்து, நகையை 'அபேஸ்' செய்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரிக்கின்றனர்
Wednesday, 11 June 2014
ஐடியா' கேட்டார் அடகு வைக்க'அம்போ' ஆனது பவுன் நகை

Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment