Wednesday, 25 June 2014

எய்ட்ஸ் போன்ற கொடிய நோயை கட்டுப்படுத்த ஆணுறை அணிந்தால் மட்டும் போதாது;


புதுடில்லி: ''எய்ட்ஸ் போன்ற கொடிய நோயை கட்டுப்படுத்த, ஆணுறை அணிந்தால் மட்டும் போதாது; இந்திய கலாசாரப்படி, ஒருவனுக்கு ஒருத்தி என்ற முறையில் வாழ்ந்தால், எய்ட்ஸ் நோயை விரட்டலாம்,'' என, மத்திய சுகாதாரத் துறை அமைச்சர், டாக்டர் ஹர்ஷ்வர்தன் கூறினார்.

டில்லி மாநில, பா.ஜ., மூத்த தலைவர்களில் ஒருவரான ஹர்ஷ்வர்தன், பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசில், சுகாதாரத் துறை அமைச்சராக உள்ளார். அமெரிக்காவில் மேற்கொள்ளப்படும், சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு முறைகளை ஆய்வு செய்ய, அங்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஹர்ஷ்வர்தன், 'நியூயார்க் டைம்ஸ்' பத்திரிகைக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளதாவது: எய்ட்ஸ் நோய் தடுப்பில், ஆணுறை எனப்படும் 'காண்டம்' பயன்பாடு சிறப்பானது தான். அதற்காக, ஆணுறை அணிந்து முறைகேடான பாலியல் உறவில் ஈடுபடலாம் என்று அர்த்தமில்லை; இந்திய கலாசாரப்படி வாழ்ந்தால், எய்ட்ஸ் நோயை விரட்டி அடிக்கலாம். கணவனும், மனைவியும், ஒருவரை ஒருவர் ஏமாற்றாமல், இந்திய கலாசாரப்படி, ஒருவனுக்கு ஒருத்தி என்ற முறைப்படி வாழ்ந்தாலே, எய்ட்ஸ் நோயை தடுக்கலாம். இதை தான் நாங்கள் வலியுறுத்துகிறோம். இவ்வாறு அவர் கூறினார்

No comments:

Post a Comment