Thursday, 19 June 2014

சிறைச்சாலையில் தேர்வு நடத்துவதற்க்காக சென்ற ஆசிரியை பாலியல் பலத்காரம் செய்த குற்றவாளி

அமெரிக்காவில்  அரிசோன மாகாணத்தில் உள்ள சிறைச்சாலையில் கைதிகளுக்கு தேர்வு நடத்த சென்ற ஆசிரியையே பாலியல் பலத்காரம் செய்த சம்பவம் தற்போது பெரிய சர்ச்சையை கிளப்பி உள்ளது.

அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்திலுள்ள சிறைச்சாலையில் பாலியல் குற்றவாளிகள் சுமார் 1300 பேர் அடைக்கப்பட்டுள்ளனர்

 இந்த சிறைச்சாலையில்  கல்வி கற்போரும் இருக்கின்றனர். இவர்களுக்கு தேர்வு நடத்துவதற்காக இளம் ஆசிரியை ஒருவர் கடந்த ஜனவரி மாதம் 30ம்தேதி கைதிகள் அடைக்கப்பட்டுள்ள சிறைச்சாலைக்கு சென்று உள்ளார். தேர்வு  நடத்த ஒரு தனி அறை ஒதுக்கப்பட்டிருந்தது. அந்த அறையில் 6 கைதிகள் அமர்ந்து தேர்வெழுதி கொண்டிருந்தனர். அனைவருமே ஏதாவது ஒரு வகையில் பலாத்கார சம்பவங்களில் தொடர்புடையவர்களாக இருந்து தண்டனை பெற்றவர்கள்.

தேர்வு நடந்த இடத்தில் கைதிகளையும், ஆசிரியையும் தவிர வேறு பாதுகாவலர்கள் யாரும் நியமிக்கப்படவில்லை. அவசர தேவைக்கு ஒரு அழைப்பு கருவி ஒன்றை  கொடுத்திருந்தனர். இந்நிலையில் தேர்வு நேரம் முடிவதற்குள் ஐந்து கைதிகள் பரிட்சையை எழுதிவிட்டு சென்றுவிட்டனர்.

 அதில் ஜேக்கப் ஹார்வி என்ற கைதி மட்டும் கடைசி நிமிடம் வரை தேர்வெழுதி கொண்டிருந்தான். ஆசிரியை மட்டும் தனியாக இருப்பதை பயன்படுத்திக்கொண்ட ஜேக்கப், திடீரென ஆசிரியை மீது பாய்ந்து பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டான்.

இதை சற்றும் எதிர்பார்க்காத ஆசிரியை, தன்னிடமிருந்த அழைப்பு கருவையை எடுத்து உதவி கேட்பதற்காக பேசமுயன்றார். அப்போதுதான், அந்த அழைப்பு கருவி தவறாக வடிவமைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதனால் பாதுகாவலர்களை அழைக்க முடியவில்லை. அதிர்ச்சிகுள்ளான ஆசிரியை பலாத்காரத்துக்கு உடன்பட மறுத்து ஜேக்கப்பை அடித்து உதைத்துள்ளார். அப்போது தன்னிடமிருந்த பேனாவால் ஆசிரியையின் தலையில் குத்திய ஜேக்கப் அவரை அடித்து உதைத்து பலாத்காரம் செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டான்.

இதுகுறித்து, அப்போது, சிறைத்துறை பெரிதாக எந்த  ஒரு நடவடிக்கையும் குற்றவாளி மீது நடவடிக்கை எடுக்க வில்லை.. இப்போது அமெரிக்க பத்திரிக்கைகள், அரிசோனா பொது பதிவாக்க சட்டத்தின்கீழ் தகவல் சேகரித்து, நடந்த சம்பவத்தை விலாவாரியாக வெளியே கொண்டுவந்துள்ளன.

 அமெரிக்க சிறைச்சாலையொன்றின் பாதுகாப்பு குறித்து தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஜேக்கப் ஹார்வி தனது 17வயதில் குடிக்க தண்ணீர் வேண்டும் என்று கேட்டு ஒரு வீட்டுக்குள் புகுந்து சென்று, 2 வயது குழந்தையின் கண்ணெதிரிலேயே அதன் தாயை பாலியல் பலாத்காரம் செய்துள்ளான்.

இதற்காக அவனுக்கு 30 ஆண்டு சிறை தண்டனை அளிக்கப்பட்டது. இச்சம்பவம் நடைபெறுவதற்கு 6 மாதங்கள் முன்புதான், அரிசோனா சிறையில் அடைத்துள்ளான் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment