Wednesday, 11 June 2014

மாணவிகளின் கண்களில் மிளகாயை அள்ளி போட்ட கொடூர ஆசிரியை



பிரித்தானியாவில் மாணவிகளை கொடுமைப்படுத்திய ஆசிரியைக்கு இரண்டரை ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கபட்டுள்ளது. 
வடக்கு இங்கிலாந்தின் சதலர்லாந்து பகுதியை சேர்ந்த ராக்மா சுல்தான்(35) என்ற ஆசிரியை மாணவிகளை ஒழுக்கமாக செயல்பட வைப்பதற்காக, அவர்களின் கண்கள் மற்றும் மர்ம உறுப்புகளில் மிளகாயை தேய்த்துள்ளார்.
மேலும் மாணவிகளின் கையில் கடித்தும், தலையில் கண்ணாடி பாட்டிகளால் அடித்தும் துன்புறுத்தி உள்ளார்.
இவரது கொடூர செயல்களை தாங்க முடியாத இரு மாணவிகள் சுல்தானவின் மீது பொலிசில் புகார் அளித்துள்ளனர்.
இதனையடுத்து கைது செய்யப்பட்டு சுல்தானாவின் மீது தொடரப்பட்ட வழக்கில் இரண்டரை ஆண்டு காலம் சிறைதண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மாணவிகளின் இந்த காயங்கள் மறையாத தழும்புகளாக இருப்பது வேதனையளிப்பதாக கூறப்படுகிறது.

No comments:

Post a Comment