Thursday, 12 June 2014

இந்தியாவின் நலனுக்கு எதிராக தொண்டு நிறுவனங்களின் செயல் - உளவுத்துறை அறிக்கை


இந்தியாவின் நலனுக்கு எதிராக தொண்டு நிறுவனங்களின் செயல் உள்ளது என்று மத்திய உளவுத் துறை அறிக்கை அளித்துள்ளத்து.

இந்தியாவில் உள்ள தொண்டுநிறுவனங்கள் செயல்பாடு குறித்து விசாரணை நடத்த உளவுத்துறைக்கு உத்தரவிடப்பட்டது. இது தொடர்பாக விசாரணை நடத்திய உளவுத்துறை தனது அறிக்கையை மத்திய உள்துறை அமைச்சகத்திடம் தாக்கல் செய்துள்ளது. அதில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. சில தொண்டு நிறுவனங்கள் இந்திய நலனுக்கு எதிராக செயல்பட்டு வருவதாகவும், இந்த தொண்டு நிறுவனங்களுக்கு வெளிநாடுகளில் இருந்து சந்தேகப்படும் படி பணம் வருவதாகவும் உளவுத்துறை அறிக்கை தாக்கல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

நாட்டின் செயல்பட்டு வரும் மொத்த 85,000 தன்னார்வ தொண்டு நிறுவனங்களில் பல நிறுவனங்கள் சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு இடையூறு செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருதவாக உளவுத்துறை உள்துறை அமைச்சகத்தை தனது அறிக்கையில் எச்சரித்துள்ளாதாக தகவல்வள் வெளியாகியுள்ளது. இந்திய தொண்டு நிறுவனங்கள் சார்பில் உள்ள அமெரிக்க வங்கிக்கணக்கு மற்றும் பல தொண்டு நிறுவனங்களின் வங்கிக்கணக்கை உளவுத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment