Thursday, 12 June 2014

பெண் கழுத்தறுத்து கொலை : காதலன் வெறிச்செயல்


பழனி : தான் காதலித்த பெண். மற்றொரு ஆணுடன் பேசுவதைப் பார்த்த காதலன், பெண்ணின் கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம், பழனியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்த வேலூர் பகுதியை சேர்ந்தவர் சங்கரப்பன். இவரது மகள் நித்யா (16). இவர் அப்பகுதியில் உள்ள தனியார் மில்லில் வேலை பார்த்து வருகிறார். நித்யா , அதே பகுதியை சேர்ந்த கொத்தனார் வேலை செய்து வரும் பாண்டித்துரை (19)யை காதலித்து வந்தார். அப்பகுதியில் நடந்த கோவில் திருவிழாவின் போது, நித்யா, மற்றொரு ஆணுடன் பேசுவதைப் பார்த்த பாண்டித்துரை, நித்யாவை ஒதுக்குப்புறமாக அழைத்துச் சென்று, கழுத்தை அறுத்து கொலை செய்தார். இதுகுறித்து பழனி தாலுகா போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். 

No comments:

Post a Comment