Friday, 27 June 2014

தாயை தாக்கியவனுடன் எதிர்த்து போராடிய 2 வயது குழந்தை


அமெரிக்காவில் உள்ள மாசசூசெட்ஸ் என்ற நகரில் லடியா ஹாரீஸ் என்ற 25 வயது பெண் ஒருவர் மெக்டொனால்டு நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். நேற்று அவர் தன்னுடைய இரண்டு வயது மகனுடன் அருகில் உள்ள பூங்காவிஒற்கு பொழுது போக்க சென்று இருந்தார். அபோது அங்கு வந்த வந்த மர்ம மனிதன்ஒருவன் ஹரீசை தக்கி உள்ளான். ஹரீசை மர்ம மனிதன் 20 முறை முகத்தில் குத்தி உள்ளான்.தனது தாயாரை தாக்கி கீழே தள்ளி காலால் எட்டி உதைக்கும் மர்ம மனிதனை கண்டு இரண்டு வயது குழந்தை தன்னுடைய தாயாரை விட்டுவிடுமாறு அழுதுகொண்டே கூறியதோடு  அவனை ஆவேசத்துடன் கால்பந்தை எட்டி உதைப்பது போல் எட்டி உதைதது.
 இதை அருகில் இருந்தவர்கள் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்துள்ளனர். இதுகுறித்து விசாரணை செய்த போலீஸ் அதிகாரிஜான் பெலுரா கூறும்போது, 'தனது தாயை காப்பாற்ற வேண்டும் என்ற வெறியுடன் ஒரு குழந்தைக்கு இருந்த எண்ணம் கூட அந்த பூங்காவில் இருந்த மற்றவர்களுக்கு இல்லாமல் போனது வருத்ததை தருகிறது. இதை வேடிக்கை பார்த்ததோடு வீடியோவும் எடுத்த பொருப்பில்லாத மக்கள் திருந்த வேண்டும் .அந்தபெண்ணுக்கு அவர் பணிபுரியும் நிறுவனத்தின் மேனேஜருக்கும்  தகாத உறவு இருந்ததாக சந்தேகப்பட்டுமேனேஜரின் உறவினர்தான் அந்த பெண்ணை தாக்கியுள்ளதாகவும்இதுகுறித்து விசாரணை நடந்து வருவதாகவும் கூறினார்.

No comments:

Post a Comment