Wednesday, 11 June 2014

டல் மாணவர்கள் புறக்கணிப்பு?


சிவகங்கை: தேர்ச்சி விகிதத்திற்காக பள்ளியில் படிக்கும் மாணவர்களை தனித்தேர்வர்களாக்கும் முயற்சியில் பள்ளிகள் ஈடுபடுவதாக புகார் எழுந்துள்ளது. தமிழகம் முழுவதும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகள், 7281 அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள் உள்ளன. ஆண்டுதோறும் சுமார் 20 லட்சம் மாணவர்கள் பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதுகின்றனர். கடந்தமாதம் முதல் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது.
ஒரே பள்ளியில் 6ம் வகுப்பிலிருந்து படித்து வரும் மாணவர்கள் பத்தாம் வகுப்பு வருகையில் அவர்களுக்கு டிசி கொடுத்து வேறு பள்ளியில் சேர்க்கவும், இதேபோல் பத்தாம் வகுப்பு முடித்த மாணவர்களை பிளஸ் 1 வகுப்பில் தொடர செய்யாமல் டிசி கொடுக்கும் நடவடிக்கையிலும் பள்ளி நிர்வாகங்கள் ஈடுபட்டு வருகின்றன. 

இல்லையெனில் ‘பள்ளியில் படிக்கட்டும், ஆனால் தனி தேர்வர்களாக தேர்வெழுதட்டும்‘ என வலியுறுத்துகின்றன. பொதுத்தேர்வின் போது பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் பெரிய அளவில் பேசப்படுகிறது. இதனால் படிப்பில் சுமார் என கருதும் மாணவர்களை பள்ளி நிர்வாகங்கள் இதுபோல் புறக்கணிப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதுகுறித்து ஆசிரியர்கள் சிலர் கூறுகையில், ‘Ôபத்தாம் வகுப்பில் குறைவான மதிப்பெண் எடுக்கும் மாணவர்களை தனியார் பள்ளிகள் சேர்ப்பதில்லை. அதிக மதிப்பெண் எடுக்கும் மாணவர்களை மட்டுமே சேர்க்கின்றன. படிப்பில் எவ்வளவு சுமாராக இருந்தாலும் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் கண்டிப்பாக சேர்த்தாகவேண்டும். 

அதேநேரம் தேர்ச்சி விகிதமும் அதிகமாக இருக்க வேண்டும் என கல்வித்துறை அழுத்தம் கொடுக்கிறது. ஆசிரியர்கள் முன்புபோல் மாணவர்களை கண்டித்து படிக்க வைக்க முடியவில்லை. ஆனால் கல்வித்துறை அழுத்தம் கொடுப்பதால் இதுபோன்ற சம்பவங்கள் அனைத்து பள்ளிகளிலும் நடக்க தொடங்கியுள்ளன. மதிப்பெண் கணக்கீடு, தேர்ச்சி விகிதம் என ஒப்பீடு செய்வதே இதற்கு காரணம். கல்வித்துறை அலுவலர்கள் இதுபோன்ற பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்,’’ என்றனர்.

No comments:

Post a Comment