தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னெஸ்பர்க் நகரின் மேற்கே ஹனிடியூ பகுதியை சேர்ந்தவர் லேக்டன் எம்வன்ஜி (வயது 36). இவரது மனைவி மெமரி எம்வன்ஜி. அவருக்கு வயது 29. 5 மாத கர்ப்பமாக உள்ளார். லேக்டனுக்கு மற்றொரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டு உள்ளது. ஏஞ்சலினா எம்வாசனானி (வயது 40) என்ற அந்த பெண் 9 மாத கர்ப்பமாக இருக்கிறார். இது தெரிந்து ஆத்திரமுற்ற லேக்டனின் மனைவி 3 முறை ஏஞ்சலினாவை தேடி அவர் வசித்து வரும் சிறிய மர வீட்டிற்கு சென்று உள்ளார். ஆனால் அவரை பார்க்க முடியவில்லை.
கையில் வாளி
ஏஞ்சலினாவின் வீட்டு சொந்தக்காரர் அவரிடம், உன்னை தேடி உனது கணவரின் மனைவி வந்து சென்றுள்ளார் என கூறியுள்ளார். கையில் அந்த பெண் வாளி ஒன்றையும் கொண்டு வந்த தகவலை ஏஞ்சலினாவிடம் தெரிவித்துள்ளார். வாளியில் என்ன இருந்தது என்பது யாருக்கும் தெரியாது. இந்த நிலையில், நேற்றிரவு (புதன்கிழமை) ஏஞ்சலினா தனது சிறிய வீட்டில் சமைத்து கொண்டு இருந்திருக்கிறார். தனது வீட்டின் கதவை மூட அவர் மறந்து விட்டார். அங்கு வந்து நின்ற லேக்டனின் மனைவி கையில் வாளியுடன் இருந்தார். பெட்ரோலை கொண்டு வந்து அதனை தன் மீது ஊற்றி தீ வைத்து விட போகிறார் என ஏஞ்சலினா நினைத்துள்ளார்.
எனவே, உனக்கு என்ன வேண்டும்? என கேட்டு உள்ளார். அதற்கு அவர், எனது கணவர் வாங்கி தந்த உனது குழந்தைக்கான ஆடைகளை என்னிடம் தர வேண்டும் என கூறியுள்ளார். அந்த கையோடு அவர் வாளியை எடுத்துள்ளார். அதில் உள்ள ஏதோ ஒன்றை தன் மீது ஊற்ற போகிறார் என்பதை தெரிந்து கொண்ட ஏஞ்சலினா அதனை பறித்து உள்ளார். இரு கர்ப்பிணி பெண்களும் கைகளில் வாளியை வைத்து கொண்டு சண்டை போட்டுள்ளனர்.
மனித கழிவு அபிஷேகம்
ஆனால், ஏஞ்சலினாவிடம் இருந்து வாளியை பறித்த லேக்டனின் மனைவி மெமரி அதில் இருந்தவற்றை ஏஞ்சலினாவின் மீது ஊற்றி உள்ளார். அதன் பின்பு படுக்கையறை முழுவதும் அதனை ஊற்றி உள்ளார். வாளியில் மனித கழிவு இருந்துள்ளது. தனது வேலை முடிந்ததும் அவர் அங்கிருந்து வெளியேறி விட்டார். இந்த சம்பவத்திற்கு பின்பு ஏஞ்சலினா கூறும்போது, லேக்டன் தனது முதல் திருமணம் மகிழ்ச்சியற்றதாக இருக்கிறது என என்னிடம் கூறினார். எனவே தான், என்னை விட 4 வயது குறைந்திருந்த அவருடன் நான் தொடர்பு ஏற்படுத்தி கொண்டேன்.
எங்களுக்கு இடையேயான தொடர்பு கடந்த 3 ஆண்டுகளாக தொடர்ந்து உள்ளது என தெரிவித்துள்ளார். ஆனால், லேக்டனின் மனைவி செய்தியாளர்களிடம் கூறும்போது, அவள் (ஏஞ்சலினா) எனக்கு அதிக வலியை தந்திருக்கிறாள். எனவே, பதிலுக்கு அவளுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என நான் விரும்பினேன். அதனால் வாளியில் மனித கழிவுகளை நிரப்பி அதனை அவள் மீது ஊற்றி என் பழியை தீர்த்து கொண்டேன் என தெரிவித்துள்ளார்.
மாயமான கணவன்
கடந்த வருடம் எனது கணவரை விட்டு பிரிந்து செல்லும்படி அவளிடம் கூறினேன். ஆனால் அவள் அதனை கேட்கவில்லை. அவளது படுக்கையில் வாளியில் இருந்ததை ஊற்ற நான் விரும்பினேன். ஏனெனில் அதில்தான் அவர்களது குழந்தை உருவாகியுள்ளது. அவள் நான் கேட்டபடி குழந்தையின் ஆடைகளை தந்திருந்தால் அவள் மீது நான் அதனை ஊற்றி இருக்க மாட்டேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்த சம்பவத்திற்கு தான் வருந்துவதாக கூறி விட்டு சிரிக்கிறார். சம்பவம் நடைபெறுவதற்கு காரணமான லேக்டனை இருவரும் தொடர்பு கொண்டுள்ளனர். ஆனால், அதற்கு பதிலில்லை.
இது குறித்து ஏஞ்சலினா கூறுகையில், அவரிடம் இருந்து எந்த பதிலுமில்லை. ஒருவேளை நாங்கள் சண்டையிட்டு கொண்டு இருக்கும்போது, அவர் மற்றொரு பெண்ணுடன் தொடர்பு கொண்டு இருந்திருக்கலாம் என கூறியுள்ளார். ஆனால், லேக்டனின் மனைவி கூறுகையில், நேற்றிரவு அவர் வீட்டிற்கு வரவில்லை. அவர் பாதுகாவலராக பணிபுரியும் இடத்திற்கு சென்று நான் பார்த்தேன். ஆனால் அங்கே அவர் இல்லை என தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment