மும்பை,
உலகில் அதிக இரைச்சலான நகரம் மும்பை என்ற அதிர்ச்சி தகவல் மராட்டிய பொருளாதார கணக்கெடுப்பு அமைப்பு நடத்திய ஆய்வில் தெரியவந்ததுள்ளது.‘
இரைச்சலான நகரம்‘பரபரப்பான சாலைகள், பல லட்சக்கணக்கான வாகனங்கள், காதை பிளக்கும் ஹாரன் ஒலி, இது தவிர வான் உயர கட்டிடங்கள் கட்டும் பணி என எப்போதும் மும்பை நகரம் ஏதாவது ஒரு இரைச்சல் சத்தத்தை எழுப்பி கொண்டே தான் இருக்கும்.
இரைச்சலான நகரம்‘பரபரப்பான சாலைகள், பல லட்சக்கணக்கான வாகனங்கள், காதை பிளக்கும் ஹாரன் ஒலி, இது தவிர வான் உயர கட்டிடங்கள் கட்டும் பணி என எப்போதும் மும்பை நகரம் ஏதாவது ஒரு இரைச்சல் சத்தத்தை எழுப்பி கொண்டே தான் இருக்கும்.
மராட்டிய பொருளாதார கணக்கெடுப்பு அமைப்பு நடத்திய ஆய்வில், ஏற்கனவே குடிநீர், காற்று மாசுபடுதலால் அபாயகரமாக உள்ள மும்பை நகருக்கு பேரிடியாக மற்றொரு தகவல் வெளியாகி உள்ளது. அது என்னவென்றால் உலகில் மிக ‘இரைச்சலான நகரம்‘ என்ற பெயரும் மும்பை நகருக்கு கிடைத்து உள்ளது.
10 லட்சம் வாகனங்கள்
இதற்கு காரணம் நாள் ஒன்றுக்கு மும்பையில் மட்டும் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் சாலையில் பவனி வருகின்றன. இதில் சுமார் 5 லட்சத்துக்கு மேற்பட்டவை வாடகை கார்களும், ஆட்டோக்களும் ஆகும்.
இது தவிர கட்டிடங்களை கட்டுவதாலும் மற்றும் இடிக்கும் போது பயன்படுத்து உயர் அழுத்த எந்திரங்களால் அதிக இரைச்சல் உருவாகிறது. மேற்கண்ட காரணங்களால் தான் உலகில் மிக இரைச்சலான நகரம் என்ற பெயர் மும்பைக்கு கிடைத்துள்ளது.
கேட்கும் திறன் பாதிப்பு
இதுகுறித்து சுற்று சூழல் ஆர்வலர் சுமைரா அப்துலாலி கூறும் போது, ‘‘உலகில் மிக இரைச்சலான நகரம் மும்பை என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. இதனால் பொது மக்களின் காது, இதயம், மூளை போன்ற உறுப்புகளுக்கு மிகுந்த அச்சுறுத்துதல் ஏற்பட்டு உள்ளது. மேலும் மக்களின் கேட்கும் திறன் பாதிக்கப்படும். மும்பையின் ஒவ்வொரு பகுதியுமே இரைச்சலான பகுதியாகவே உள்ளது. எனவே இரைச்சல் ஏற்படுவதை தடுக்க நிர்வாகத்தினர் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் எடுக்கவேண்டும்’’ என்றார்.
மேலும் இதுகுறித்து ஜே.ஜே. ஆஸ்பத்திரி முன்னாள் பேராசிரியர் டாக்டர் அல்பா பட்டேல் கூறுகையில்,‘‘காற்று மாசு அடைவதால் உடல் நலம் கடுமையாக பாதிக்கப்படுகிறது. குறிப்பாக மாரடைப்பு, நுரையீரல் புற்று நோய் ஏற்படுகிறது. மக்கள் தூய்மையான காற்றை சுவாசிக்கும் போது அவர்களின் வாழ் நாள் அதிகரிக்கும்’’ என்றார்.
No comments:
Post a Comment