ஐந்து பெண் பிள்ளைகளைப் பெற்றதற்காக கணவன் வீட்டில் கடும் சித்ரவதைக்கு ஆளான பெண் கடைசியில் தன் உயிரையே மாய்த்துள்ளார்.
உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் மம்தா. இவருக்கும் மோனு என்பவருக்கும் கடந்த 2008ம் ஆண்டு திருமணம் நடந்தது. திருமணத்திற்குப் பிறகு கணவனுடன் அரியானா மாநிலம் பல்வால் பகுதியில் வசித்து வந்தார். அப்போது மம்தாவுக்கு முதல் குழந்தை பெண்ணாக பிறந்ததால் கணவன் குடும்பத்தினர் அவரை துன்புறுத்த தொடங்கியுள்ளனர். இந்த சித்ரவதை தொடர்ந்து 5 குழந்தைகள் பெறும் வரை நீடித்தது.
மீண்டும் கருவுற்ற மம்தாவை கர்ப்பிணி என்றும் பாராமல் கொடுமைப்படுத்திய அவரது கணவன், அவரை கைகழுவ தீர்மானித்து, கடந்த 14-ம்தேதி உத்தர பிரதேச மாநிலத்திற்கு கொண்டு வந்து விட்டுள்ளார். மீண்டும் வீட்டுக்கு வந்தால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியுள்ளார்.
இதனால் மனமுடைந்த மம்தா, அங்கிருந்து தன் சகோதரர் மகேந்திர சிங்கின் வீட்டிற்குச் சென்றுள்ளார். அங்கு, 20-ம் தேதி தீக்குளித்து இறந்துள்ளார்
No comments:
Post a Comment