Wednesday, 11 June 2014

கந்து வட்டி வசூலித்த பெண் நகரை விட்டு வெளியேற கமிஷனர் உத்தரவு

கந்து வட்டி வசூலித்த பெண் நகரை விட்டு வெளியேற கமிஷனர் உத்தரவு
திருவனந்தபுரத்தில் கந்து வட்டி கொடுமை காரணமாக ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் தற்கொலை செய்தனர். இந்த சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து கந்துவட்டி வசூலிப்பவர்கள் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க உள்துறை மந்திரி ரமேஷ் சென்னி தாலா உத்தரவிட்டார்.
இதையடுத்து ‘ஆபரேசன் குபேரா’ என்ற பெயரில் கேரளா முழுவதும் கந்து வட்டி வசூலிப்பவர்களை போலீசார் வேட்டையாடி வருகின்றனர்.
இந்தநிலையில், திருவனந்தபுரம் தைக்காடு பகுதியை சேர்ந்த சச்சு(வயது 44) என்ற பெண் கந்து வட்டி வசூலிப்பதாக திருவனந்தபுரம் நகர போலீஸ் கமிஷனருக்கு ஏராளமான புகார்கள் வந்தன. இதையடுத்து போலீசார் அவரது வீட்டில் அதிரடியாக புகுந்து சோதனை நடத்தினர். இதில் சச்சு பலரிடமிருந்து மிரட்டி வாங்கிய வீட்டு பத்திரங்கள், வெற்று காசோலைகள், லட்சக் கணக்கில் பணம் மற்றும் பொருட்கள் கைப்பற்றப்பட்டன.
பின்னர் சச்சுவை போலீசார் கைது செய்து திருவனந்தபுரம் நகரை விட்டு வெளியேற கமிஷனர் வெங்கடேஷ் உத்தர விட்டார். இதன்படி, அடுத்த 1 வருடத்திற்கு திருவனந்தபுரம் நகர எல்கைக்குள் போலீசின் முன் அனுமதியின்றி நுழையக் கூடாது என்றும், மீறி நுழைந்தால் 3 வருடம் வரை சிறைத் தண்டனை கிடைக்கும் வகையில் குண்டர் தடுப்புச்சட்டத்தின் கீழ் கைது செய்யும்படி கமிஷனர் வெங்கடேஷ் உத்தரவிட்டுள்ளார். கந்து வட்டி வசூலிக்கும் ஒருவரை நகரை விட்டு வெளியேற போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டிருப்பது கேரளாவில் இது முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment