Wednesday, 11 June 2014

எகிப்தில் 50 பேர் கும்பலால் நாசமாக்கப்பட்ட பெண்

கெய்ரோ:எகிப்தில், கடந்த ஞாயிறு அன்று, புதிய அதிபராக சிசி பொறுப்பேற்றதை கொண்டாடும் விதமாக, தலைநகர் கெய்ரோவில் உள்ள தஹிரிர் சதுக்கத்தில் கூடியவர்கள், அங்கு வந்த பெண்ணிடம் கும்பலாக பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு, அந்தப் பெண்ணை நாசம் செய்து விட்டனர். இந்தப் படங்கள், சமூக வலைதளங்களில் வெளியாகி, உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பாதுகாப்பு கிடையாது:அரபு நாடுகளில் ஒன்றான எகிப்தில், பொது இடங்களில் பெண்கள் தனியாக நடமாட முடியாது; அவ்வாறு நடமாடும் பெண் களுக்கு பாதுகாப்பு கிடையாது. குடும்ப உறவுக்கார ஆண்களுடன் வேண்டுமானால், பெண்கள் வெளியிடங்களில் சேர்ந்து செல்லலாம்.அவ்வாறு இல்லாமல் தனித்து செல்லும் பெண்கள், மானத்துடன் உயிர் தப்புவது கடினம். பெண்களுக்கு எதிரான பாலியல் அத்துமீறல், 'சில்மிஷ' குற்றங்கள் அந்த நாட்டில் தண்டனைக்குரிய குற்றமாக கருதப்படுவது இல்லை.

இதனால், பெண்களுக்கு எதிரான கொடுமைகள் அதிகரித்ததால், சில நாட்களுக்கு முன் தான், 'பெண்களிடம் அத்துமீறும் ஆண்களுக்கு அபராதம், சிறை தண்டனை விதிக்கப்படும்' என, அந்நாட்டு அரசு அறிவித்தது.அதிபர் பொறுப்பேற்புநிலைமை இவ்வாறு இருக்க, கடந்த ஞாயிறு அன்று, தலைநகர் கெய்ரோவில் உள்ள தஹிரிர் சதுக்கத்தில், ஆயிரக்கணக்கானோர் கூடி, அங்கிருந்த பிரமாண்ட திரைகளில், புதிய அதிபராக சிசி பொறுப்பேற்பதை பார்த்து ரசித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது, ஒரு பெண்ணின் மரண ஓலம் கேட்டது. அதிர்ச்சி அடைந்தவர்கள், அந்தப் பக்கம் திரும்பிய போது, 50க்கும் மேற்பட்டவர்களால், ஒரு பெண் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டிருந்தார். அங்கிருந்த போலீஸ்காரர் ஒருவர், கையில் துப்பாக்கியை எடுத்து, உயர்த்தி பிடித்து, 'சுட்டுவிடுவேன்' என, சத்தம் போட்ட படி, அந்த கொடூர கூட்டத்தை நெருங்கி, அந்த கொடியவர்களை பெண்ணிடம் இருந்து விலக்க முற்பட்டார்.
எனினும், நீண்ட நேரமாக முடியவில்லை. அதற்குள் அந்தப் பெண், முழு நிர்வாணமாக ஆக்கப் பட்டதுடன், உடல் முழுவதும் ரத்தம் பெருகி, சடலமாக அந்த கும்பலிடம் இருந்து மீட்கப்பட்டார்.

இதை சிலர், தங்கள் மொபைல் போனில் படம் பிடித்து, சமூக வலைதளங்களில் சுற்றவிட்டு மகிழ்ந்தனர். இந்த கொடுமையை, அந்நாட்டின் மகளிர் அமைப்புகள் கண்டித்துள்ளன. எனினும், 'பொது இடங்களில் பெண்கள் வந்தால் இப்படித் தான்' என, கொக்கரிப்பது போல, அதை யாரும் பெரிதாக கண்டுகொள்ளவில்லை.

பெண் நிருபர்:கடந்த ஆண்டு, அரசுக்கு எதிரான போராட்டங்களில் செய்தி சேகரிக்க சென்ற, வெளிநாட்டு பெண் நிருபரும் இது போல, குற்றுயிரும், குலைஉயிருமாக ஆக்கப்பட்டார். 'எகிப்தே வேண்டாம்' என கூறி அவர், தன் நாட்டுக்கு ஓடிப் போய்விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.இத்தகைய மனித மிருகங்களை கட்டுப்படுத்த புதிய அதிபர் சிசி, கடுமையான சட்டங்களை இயற்ற வேண்டும் என, அந்நாட்டில், பெண்கள் குரல் வலுத்து உள்ளது.

No comments:

Post a Comment