மனித மாமிசம் சாப்பிடுவது ப்ல நாடுகளிலும் இருந்து வருகின்றது... இதை மையமாக கொண்டு பல படங்களை ஹாலிவுட்காரர்கள் எடுத்து இருக்கிறார்கள். சமீபத்தில் பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாநிலம் பக்கார் மாவட்டத்தில் மனித மாமிசங்களை தின்றதாக 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.இதேபோல், கடந்த மார்ச் மாதம் இந்தோனேசியா நாட்டை சேர்ந்த 29 வயது பெண்ணை, மனிதர்களை கொன்று அவர்கள் மாமிசத்தை சாப்பிட்டதற்காக போலீசார் கைது செய்துள்ளார்கள்.
வடக்கு பிரான்ஸ் லங் வேயை சேர்ந்த 71 வயது பெண் தனது 80 வயது கணவரை ஏதோ காரணத்திற்காக கொன்றுவிட்டார். அதோடு விடவில்லை, அவரது இதயம், மூக்கு மற்றும் ஆண் உறுப்பு ஆகியவற்றை அறுத்து எடுத்து சமைத்து சாப்பிட்டுவிட்டார். கடந்த மே மாதம் 22 ந்தேதி அந்த பெண்ணை போலீசார் கைது செய்தனர். இப்போது அவளை மனநிலை பரிசோதனைக்கு அனுப்பியிருக்கிறார்கள்.
No comments:
Post a Comment