உலக அகதிகள் தினமாக இன்றைய நாள் கடைபிடிக்கப்பட்டு வரும் வேளையில், தற்போதைய நிலவரப்படி, தங்களது வசிப்பிடங்களை விட்டு இடம்பெயர்ந்து வெளியேறி, உலகெங்கிலும் அகதிகளாக தஞ்சமடைந்துள்ள மக்களின் எண்ணிக்கை 51 கோடியே 20 லட்சத்தை கடந்துள்ளது என ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகள் முகமை தெரிவித்துள்ளது.
இரண்டாம் உலகப் போருக்கு பிந்தைய காலகட்டத்தில் இந்த எண்ணிக்கை முதன்முறையாக உயர்ந்துள்ளது என குறிப்பிட்டுள்ள அந்த முகமை, 2012-ல் 45 கோடியே 90 லட்சமாக இருந்த இந்த எண்ணிக்கை, சிரியாவில் நிகழும் உள்நாட்டுப் போரின் விளைவாக பெருமளவு அதிகரித்து விட்டதாக குறிப்பிடுகிறது.
ஆப்கானிஸ்தான், சிரியா, சோமாலியா உள்ளிட்ட நாடுகளில் நிலவிவரும் சூழ்நிலையே இந்த எண்ணிக்கை பெருக முக்கிய காரணம். பாகிஸ்தான், ஈரான், லெபனான் ஆகிய நாடுகள் மற்ற நாடுகளை விட அதிக அகதிகளுக்கு புகலிடம் அளித்துள்ளன என்றும் ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகள் முகமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment