கர்நாடக மாநிலத்தில் உள்ள 224 தொகுதிகளுக்கும் மே 5-ம் தேதி ஒரே
கட்டமாக தேர்தல் நடக்கிறது. இத்தேர்தலில் காங்கிரஸ், பா.ஜனதா, மதச்சார்பற்ற
ஜனதா தளம் மற்றும் எடியூரப்பாவின் கர்நாடக ஜனதா கட்சி ஆகியவற்றுக்கிடையே
போட்டி உள்ளது.
இந்நிலையில், பா.ஜனதாவுக்கு கடும்
போட்டியாக கருதப்படும் எடியூரப்பா இன்று தனது தேர்தல் அறிக்கையை
வெளியிட்டார். அதில் பல்வேறு சலுகைகளையும், வாக்குறுதிகளையும்
தெரிவித்துள்ளார்.
விவசாயிகள் மற்றும் மீனவர்கள்
கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய ரூ.1 லட்சம் வரையிலான கடன்கள் தள்ளுபடி
செய்யப்படும். 65 வயதுக்குட்பட்ட விவசாயிகளுக்கு மாதந்தோறும் 500 ரூபாய்
பென்சன் வழங்கப்படும். முஸ்லிம்களின் முன்னேற்றத்திற்காக ரூ.2000 கோடியும்,
கிறிஸ்தவ மக்களின் வளர்ச்சிக்கு ரூ.250 கோடியும் ஒதுக்கீடு செய்யப்படும்.
பெண்களை
பாதுகாக்கும் வகையில், பெண்களுக்கு எதிராக குற்றங்கள் செய்வோர் ஜாமீனில்
வெளிவர முடியாத அளவுக்கு வலிமையான சட்டம் கொண்டு வரப்படும். நிலுவையில்
உள்ள நீர்ப்பாசன திட்டங்கள் 5 ஆண்டுக்குள் நிறைவு செய்யப்படும். மின்
பற்றாக்குறையை போக்கி, விவசாயம் மற்றும் தொழில்துறைக்கு உதவும் வகையில்
5000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு எடியூரப்பா தனது தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment